உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எந்த தவறும் இல்லை!

எந்த தவறும் இல்லை!

டில்லி சட்டசபை தேர்தலில், பலம் வாய்ந்த பா.ஜ., வேட்பாளர் ரமேஷ் பிதுாரியை, ஆதிஷி தோற்கடித்துள்ளார். தன் வெற்றிக்கு உழைத்த தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில், அவர்களுடன் நடனமாடினார். இதில், எந்த தவறும் இல்லை.பிரியங்கா சதுர்வேதிராஜ்யசபா எம்.பி., உத்தவ் சிவசேனா தரப்பு 14 கோடி பேர் தவிப்பு!மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாததால் நாட்டில் 14 கோடி பேர், உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சலுகைகளை பெற முடியாமல் தவிக்கின்றனர். அவர்களின் நலன் கருதி, மக்கள் தொகை கணக்கெடுப்பை பா.ஜ., அரசு விரைவில் நடத்தி முடிக்க வேண்டும்.சோனியா காங்., - பார்லி., குழு தலைவர்ஊழலுக்கு எதிரான வெற்றி!டில்லியில் பா.ஜ., பெற்றது சாதனை வெற்றி. ஹரியானா, மஹாராஷ்டிராவை தொடர்ந்து தலைநகர் டில்லியிலும், பிரதமர் மோடி தலைமையில், பா.ஜ., வெற்றி பெற்றுஉள்ளது. டில்லி மக்கள் ஊழலுக்கு எதிராகவும், வளர்ச்சிக்கு ஆதரவாகவும் ஓட்டளித்துள்ளனர்.ராம்தாஸ் அத்வாலேமத்திய அமைச்சர், இந்திய குடியரசு கட்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !