உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விஜயை கைது செய்ய வேண்டுமென கூறுவதில் அர்த்தம் இல்லை: சொல்கிறார் திருமா

விஜயை கைது செய்ய வேண்டுமென கூறுவதில் அர்த்தம் இல்லை: சொல்கிறார் திருமா

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில், விஜயை கைது செய்ய வேண்டுமென கூறுவதில் அர்த்தம் இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=v75jowqm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சென்னையில் நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த ஆணையத்தின் அறிக்கை வந்த பிறகு, அரசு அது குறித்து முடிவு செய்யும் என்று நம்புகிறேன். விஜய் இதுவரை அந்த வழக்கில் எப்ஐஆரில் சேர்க்கப்படவில்லை. அப்படி இருக்கிற போது அவரை கைது செய்ய வேண்டும் என்று கூறுவதில் அர்த்தம் இல்லை. அவருக்கு இதில் வேறு கையில் தொடர்பு இருக்கிறது என்று அரசு கருதினால், போலீசார் கருதினால் சட்டப்பூர்வமாக அவர்கள் நடவடிக்கையை மேற்கொள்வார்கள். திட்டமிட்டே திமுகவுக்கு எதிரான, திமுக அரசுக்கு எதிரான வெறுப்பை சிலர் பரப்பி வருகிறார்கள். அதில் இதுவும் ஒன்று. ஆறுதல் சொல்வதற்கு அனைவருக்கும் பொறுப்பு இருக்கிறது, கடமை இருக்கிறது. அந்த வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்தது மகிழ்ச்சி. ஆனால் பாஜ இந்த பிரச்னையில் அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படுகிறது என்கிற விமர்சனமும் இருக்கத்தான் செய்கிறது. விசாரணை தொடங்குவதற்கு முன்பே, அண்ணாமலை போன்றோர அரசியல் உள்நோக்கத்துடன் கருத்து தெரிவித்தார்கள் என்பதால் இந்த விமர்சனங்கள் இருக்கிறது. அரசு இந்த சம்பவத்தில் உடனடியாக தலையிட்டு நிவாரண பணிகளை மேற்கொண்டு இருக்கிறது. வழக்கும் பதிவு செய்து புலனாய்வு விசாரணையை தொடங்கி இருக்கிறது. விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டு உள்ளது. இந்த சூழலில் நீதித்துறையை அரசுக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகத்தினர் அணுகி இருப்பது எல்லோருக்கும் அதிர்ச்சி தான். நீதித்துறை நிதானமாக கையாளும் என்று சொல்லி இருப்பதே சரி என்றே கருதுகிறேன். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

இது அரசியல் விளையாட்டு!

இது குறித்து சமூக வலைதளத்தில் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் கொடுந்துயரத்தில் தனது அரசியல் விளையாட்டை வெளிப்படையாகத் தொடங்கிவிட்டது பாஜ. கரூரில் நடந்த கொடூரத்தைப் பற்றி 'உண்மை கண்டறியும் குழுவை' அமைத்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதே ஆகும். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியும் உடனடியாக இதுபோன்ற உண்மை அறியும் குழுவை நியமித்து கரூருக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.பாஜவின் சதியை முறியடிக்க காங்கிரஸ் கட்சியின் தலையீடு உடனடி தேவையாகவுள்ளது. ராகுல் இது தொடர்பாக தமிழகம் அல்லாத பிற மாநிலங்களைச் சார்ந்த பார்லிமென்ட் உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றை நியமித்திட வேண்டுமென விசிக சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

1968shylaja kumari
செப் 30, 2025 19:50

சரி சரி திமுகவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததற்கு பிரதி பலனாக மேலும் 2 சீட்டு கேட்டு வாங்குங்க


Balamurugan
செப் 30, 2025 17:56

சென்ற ஆட்சியில் நீங்கள் என்ன செய்தீர்களோ அதை தான் இப்போதைய எதிர்க்கட்சிகள் செய்கின்றனர். எல்லோரும் உங்களை போலவே அடிமை என்று நினைக்க வேண்டாம்


theruvasagan
செப் 30, 2025 15:43

இநத சம்பவத்தை எதிர்கட்சிகள் அரசியல் ஆக்குகிறார்களாம். எதிர்கட்சியாக இருந்தபோது அரசியல் செய்யாமல் அவியலா செய்வார்கள் என்று கேட்டவரிடம் இதைச் சொல்லவும்.


R.MURALIKRISHNAN
செப் 30, 2025 15:20

திருமா நீயெல்லாம் கருத்து கூற லாய்க் கற்றவர்


Indhuindian
செப் 30, 2025 15:00

சினிமா பாக்க போன அல்லு அர்ஜுனை காங்கிரஸ் அரசு கைது செய்தது ஏன்னா அங்கே வந்த ஒரு ரசிகர் செத்துபோட்டாரு. ஆனா இங்கே நாப்பது பேர் பலி விஜய் சீன்லயே இல்லை ஓடி பூட்டார் அவரை கைது செய்ய கூடாது உங்க தர்மம் நியாயம் எல்லாம் அப்படியே புல்லரிக்குது இதுதான் திராவிட மாடல் போல இருக்கு. தி முக கஷ்ட்டிவுட்டுடா விஜய்க்குதானே காவடி எடுக்கணும் அதனலதான் திராவிட மாடல்ல இருக்கற கூட்டணி காட்சியெல்லாம் அப்படியே சைலன்ட்


Balamurugan
செப் 30, 2025 18:22

அல்லு அர்ஜுன் உள்ளூர் காவல் நிலையத்துக்கு தகவல் தராமல் பொது இடத்துக்கு போனது தவறு. இங்கே விஜய் முன் அனுமதி வாங்கிவிட்டு தான் சென்றிருக்கிறார். விஜய் காலதாமதம் செய்தது தவறு. திறந்த வெளி வாகனத்தில் வந்திருந்தால் கூட்டம் ஓரளவுக்கு குறைந்திருக்கும். விஜய்யும் மக்களை வைத்து அரசியல் செய்கிறார். கண்மூடித்தனமாக சினிமாக்காரர்களை ஆதரிக்கும் அறிவில்லாத மக்கள் மீதும் தவறு இருக்கு. அண்ணாதுரை, கருணாநிதி, MGR , ஜெயலலிதா, ஸ்டாலின், உதயநிதி, சீமான் இப்போதைய விஜய் வரை சினிமாக்காரர்களின் பிடியில் தமிழக மக்கள் உள்ளனர். இதில் MGR மட்டும் ஒருவிதத்தில் ஏற்றுக்கொள்ளலாம்.


Sekar
செப் 30, 2025 14:17

முக்கிய குற்றவாளி விஜயை நிச்சயம் கைது செய்ய வேண்டும் அதற்கான தண்டனையை அவர் பெறவேண்டும்.


பேசும் தமிழன்
செப் 30, 2025 14:03

உண்மை கண்டறியும் குழு அமைத்தால்.... இவருக்கு என்ன கஷ்டம்... நல்லது தான்.. இந்த சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் தீய சக்திகள் யார் யார் என்ற உண்மை வெளிவரும்.. அது நல்லது தானே.. இவர் பதறுவதை பார்த்தால்.... எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் அல்லவா இருக்கிறது.


Ramamoorthy M
செப் 30, 2025 13:47

திருட்டு முகவிடம் வாங்குன காசுக்கு உனக்கு ஒரு குத்து, சோசப்புவிடம் வாங்க போற காசுக்கு அங்க ஒரு குத்து. ஆக மொத்தம் ரெண்டு குத்து. இப்படிக்கு பிளாஸ்டிக் சேர் வளவன்


பேசும் தமிழன்
செப் 30, 2025 13:44

இங்கே இல்லையென்றால்... அங்கே போய் அடைக்கலமாகி விடலாம் என்ற எண்ணத்தில் தான்.... இப்படி முட்டு கொடுக்கிறீர்களா ??


Samy Chinnathambi
செப் 30, 2025 13:41

ஏன்னா இவங்க ஆளுங்க கையில கிடைக்கறதை எல்லாம் திருடிட்டு போயிடுவாங்க.. அப்புறம் இவர்களுக்கும் அதே பிரச்சினை வரும்.. அதனால இப்பவே ஒரு பக்கத்துல இலையை போட்டு வைப்போம்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை