உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கச்சா எண்ணெய் பற்றாக்குறை கிடையாது: மத்திய அமைச்சர் திட்டவட்டம்!

கச்சா எண்ணெய் பற்றாக்குறை கிடையாது: மத்திய அமைச்சர் திட்டவட்டம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'கச்சா எண்ணெய் இருப்பு போதுமானதாக இருக்கிறது. பற்றாக்குறை என்ற பேச்சே இல்லை' என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி உறுதிபட தெரிவித்தார்.இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம், ரஷ்யா - உக்ரைன் போர் உள்ளிட்ட காரணங்களால் கச்சா எண்ணெய் விலை சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் விலை மேலும் உயரும்; கச்சா எண்ணெய் பற்றாக்குறை ஏற்படும் என்றெல்லாம் சர்வதேச அளவில் யூகங்கள் வெளியாகி வருகின்றன.இந்நிலையில், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியதாவது: நாம் கச்சா எண்ணெயை 39 நிறுவனங்கள் மூலம் பெறுகிறோம். இதற்கு முன்னர் 27 நிறுவனங்கள் மூலம் தான் பெற்று வந்தோம். சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் தேவையை விட அதிகமாகவே கிடைக்கிறது.உலக சந்தையில், புதிய நிறுவனங்கள் உள்ளே நுழைந்துள்ளன. சர்வதேச அளவில் , எங்குமே பற்றாக்குறையே இல்லை. நடப்பு 2024 ஜூலை கணக்கின்படி, கச்சா எண்ணெய் இறக்குமதியில், நாம் ரஷ்யாவிடமிருந்து 44 சதவீதம் பெறுகிறோம். இவ்வாறு ஹர்தீப் சிங் புரி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
அக் 08, 2024 06:25

ரஷ்யாவிலும் கனடாவிலும் எண்ணெய் வளம் ஏராளமாக இருக்கிறது. ஆகவே அரபிகளை ஒழித்துக்கட்ட அவர்கள் தயங்க மாட்டார்கள். கொள்ளை விலையும் கிடைக்காது. இந்திய அரசின் நிதி சீரமைப்புக்கு குறைந்த விலை உதவும். இந்தியாவுக்கு சீரான பொருளாதார வளர்ச்சி சாத்தியம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை