உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி பற்றாக்குறை இல்லை

வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி பற்றாக்குறை இல்லை

பெலகாவி: ''வாக்குறுதி திட்டங்களுக்கு பட்ஜெட்டிலேயே, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து துறைகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வளர்ச்சி பணிகளுக்கு நிதி பற்றாக்குறை இல்லை,'' என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.மேல்சபை கேள்வி நேரத்தில், பா.ஜ., உறுப்பினர் சி.டி.ரவியின் கேள்விக்கு பதிலளித்து, முதல்வர் சித்தராமையா எழுத்து மூலமாக கூறியதாவது:வாக்குறுதி திட்டங்களை மாற்றுவது குறித்து, அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. வாக்குறுதி திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட பின், நடப்பாண்டு நவம்பர் இறுதி வரை, கிரஹலட்சுமி திட்டத்துக்கு, 32,817 கோடி ரூபாய்; அன்னபாக்யா திட்டத்துக்கு 8,931 கோடி ரூபாய்; கிரஹ ஜோதி திட்டத்துக்கு 14,869 கோடி ரூபாய்; சக்தி திட்டத்துக்கு 6,543 கோடி ரூபாய், யுவநிதி திட்டத்துக்கு 221.3 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.மாவட்ட அளவில் வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்த, மாவட்ட கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநில, மாவட்ட, தாலுகா அளவிலான கமிட்டி தலைவர்கள், துணை தலைவர்கள், உறுப்பினர்களுக்கு ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வாக்குறுதி திட்டங்களுக்கு பட்ஜெட்டிலேயே, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து துறைகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. துறைகள் சார்ந்த வளர்ச்சி பணிகளுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படாது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை