உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒழுக்கம், கண்ணியம் இருக்கணும்: ஆபாச யூடியூபருக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு

ஒழுக்கம், கண்ணியம் இருக்கணும்: ஆபாச யூடியூபருக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு

புதுடில்லி: யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியாவை கடுமையாகக் கண்டித்த சுப்ரீம் கோர்ட், மீண்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்ய அனுமதி அளித்தது.இந்தியாஸ் காட் லேட்டன்ட்' என்ற நிகழ்ச்சியில் அல்லாபாடியாவின் ஆபாசமான கருத்துக்களைத் தொடர்ந்து, பிப்ரவரி 18 அன்று சுப்ரீம் கோர்ட், அவர் எந்த நிகழ்ச்சியையும் ஒளிபரப்ப கூடாது என்று தடை விதித்தது, அதே நேரத்தில் மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் அசாம் காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்ட பல எப்.ஐ.ஆர். களின் அடிப்படையில் கைது செய்யப்படுவதிலிருந்து இடைக்கால பாதுகாப்பை வழங்கியது.இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் இன்று ரன்வீர் அல்லாபாடியாவுக்கு மிகப்பெரிய நிவாரணமாக, வீடியோ ஒளிபரப்பு செய்ய அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.அறநெறி மற்றும் கண்ணியத்திற்கு உட்பட்டு தனது நிகழ்ச்சிகளை நடத்த அவருக்கு சுதந்திரம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட் கூறியது.நீதிபதிகள் கூறியதாவது:பல ஊழியர்கள் இருப்பதாக அவர் கூறுகிறார், எனவே வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ள குடும்பங்கள் உள்ளன. ஒழுக்கத்தையும் கண்ணியத்தையும் பேணுவதற்கு உட்பட்டு, அவர் ஒரு நிகழ்ச்சியை நடத்த விரும்பினால், அவரால் முடியும்,பேச்சு சுதந்திரத்திற்கு வரம்புகள் உள்ளன. ஆபாசமான மொழியைப் பயன்படுத்துவது நகைச்சுவை அல்ல. அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதற்கான உத்தரவாதத்தை நாடு வழங்குகிறது, ஆனால் சில கடமைகளும் உள்ளன.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். அதே நேரம், ஆபாசமாக பேசியதற்கு அல்லாபாடியாவுக்கு கடுமையான கண்டனமும் நீதிபதிகள் தெரிவித்தனர்.ஆன்லைன் ஊடக உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களின் தொகுப்பை வரைவு செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரையும் வழங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

KSB
மார் 05, 2025 08:13

What sort of judgement is this? Only affluent people escape with expression of "regret", " apology if it had pained some sections of the society" etc. The common man gets punishment. The corrupts, terrorists, murderers, rapists get bail. Where are we going? Unless such people are punished severely how will there be respect for judiciary or police?


Yuvaraj Velumani
மார் 04, 2025 10:31

கண்டிப்பு மக்கள் இளிச்சவாயனிக


m.arunachalam
மார் 03, 2025 22:50

புகழ் என்ற போதைக்கு அடிமையானவர்களால் ஒரு எல்லையில் நிற்க முடியாது . சினிமாவில் பெண்களின் உடை 50 வருடங்களுக்கு முன் இருந்த விதமும் தற்போதைய நிலையையும் பார்த்தல் புரியும் . எல்லை மீறுதல் செய்தாக வேண்டும். ஆகவே கண்டித்தால் போதாது . தண்டித்தல் அவசியம் .


Gnana Subramani
மார் 03, 2025 22:06

கண்டிப்பு, கண்டனம், அறிவுரை மட்டும் தான் . தண்டனை தவிர மற்றது எல்லாம் கிடைக்கும்


GMM
மார் 03, 2025 21:40

ஒழுக்கம் கண்ணியம் இருந்தால் ஆபாச கருத்து தோன்றாது. ஆபாச நிறுவனம் ஊழியர்கள் வாழ்வாதாரம் வேண்டும் என்றால், இங்கு பணி புரிதல் கூடாது. யூ டூப்பர் வேறு ஒரு ஒழுக்கமான ஊழியரிடம் பொறுப்பை ஒப்படைக்க முடியும். உச்ச நீதிமன்றம் சட்ட படி குற்றம் என்றால் தண்டிக்க வேண்டும். இல்லை என்றால் விடுதலை. சட்டவிதிக்கு கோரிக்கை உட்பட வில்லை என்றால், மன்றம் பஞ்சாயத்து செய்ய முடியாது. அரசு நிர்வாக பொறுப்பில் விட வேண்டும். அவர்களுக்கு தான் சூழலுக்கு தகுந்த முடிவு எடுக்கும் அதிகாரம். எந்த நீதிபதிக்கும் சூழலுக்கு தகுந்த முடிவு எடுக்கும் அதிகாரம் கிடையாது.


SUBBU,MADURAI
மார் 03, 2025 20:56

கண்டிப்பு என்ன வெளக்கெண்ணை வேண்டியதிருக்கு அதற்கான தண்டனையை கொடுக்க வேண்டாமா வர வர நீதிமன்றங்களின் மேல் சாமானிய மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை பொய்த்து போய் கொண்டு இருக்கிறது. ஒரு வேளை திமுகவின் RSB சொன்ன நீதிபதிகள் இன்னமும் இருந்து கொண்டு இருக்கிறார்கள் போல


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை