உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அவங்க முழுமையான ஒத்துழைப்பு தரவில்லை; உத்தவ், சரத்பவார் கட்சிகள் மீது காங்., குற்றச்சாட்டு

அவங்க முழுமையான ஒத்துழைப்பு தரவில்லை; உத்தவ், சரத்பவார் கட்சிகள் மீது காங்., குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில்,மஹா விகாஸ் அகாடி கூட்டணியில் உள்ள உத்தவ் மற்றும் சரத்பவார் ஆகிய இரு கட்சியினரும் எங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு தரவில்லை என கர்நாடக உள்துறை அமைச்சரும், மஹாராஷ்டிரா தேர்தல் பொறுப்பாளர்களில் ஒருவருமான பரமேஸ்வர் குற்றம் சாட்டி உள்ளார்.மஹாராஷ்டிராவில் நேற்று சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் 233 ல் மஹாயுதி கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றது.ஆனால் மஹா விகாஸ் அகாடி கூட்டணியோ வெறும் 49 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.இந்நிலையில் காங்கிரஸின் மஹா., தேர்தல் பொறுப்பாளரான கர்நாடகா அமைச்சர் பரமேஸ்வர் கூறுகையில்,காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு, பல தொகுதிகளில், மஹா விகாஸ் அகாடி கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா உத்தவ் அணியின் முழுமையான ஒத்துழைப்பு தேவைப்பட்டது ஆனால் கிடைக்கவில்லை. அதேபோல,உத்தவ் அணிக்கு காங்கிரஸ் தரப்பில் ஒத்துழைப்பு தேவைப்பட்டது. ஆனால் கிடைக்கவில்லை.தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் அணியை சேர்ந்தவர்களும் அதே வகையில் செயல்பட்டனர். இப்படி முழு ஒத்துழைப்பு கிடைக்காத நிலையில், கூட்டணிக்குள் சில குறைகள் இருந்தன. இதனால் உத்தவ் அணி 20 தொகுதிகளிலும் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் அணிக்கு 10 தொகுதிகளில் மட்டும் தான் வெற்றி கிடைத்தது.105 தொகுதிகளில் போட்டியிட்ட, காங்கிரஸ் விதர்பாவில் நிறைய தொகுதிகளில் வென்றிருக்கலாம். 50க்கும் மேற்பட்ட தொகுதிகள் எதிர்பார்த்தோம். ஆனால் எங்களுக்கு வெறும் 8 தொகுதிகளில்தான் வெற்றி கிடைத்தது. 70 தொகுதிகளுக்குமேல் எதிர்பார்த்தோம் ஆனால் அதை பெறமுடியவில்லை.இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

theruvasagan
நவ 25, 2024 08:56

மராட்டியர்கள் ஒன்றும் சோற்றால் அடித்த பிண்டங்கள் இல்லை. ரூ 500 க்கும் பிரியாணி குவார்டருக்கும் தங்கள் வாழ்க்கையை அடமானம் வைக்கும் இனம் கிடையாது. கட்சிகளின் தராதரத்தை எடைபோட்டு ஒவ்வொரு தேர்தலிலும் யோசித்து வாக்களிப்பவர்கள்.


பேசும் தமிழன்
நவ 25, 2024 08:00

அவர்கள் ஒன்றும் தமிழர்களை போல் இளிச்சவாயர்கள் இல்லை.. இந்துக்களை புண்படுத்தும் வகையில் பேசி விட்டு அங்கே ஓட்டு வாங்க முடியாது.. அதே நிலை தமிழகத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக விழித்து கொண்டு வருகிறார்கள்.. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வேலையை பிஜெபி கட்சி அண்ணாமலை அவர்கள் செய்து வருகிறார்.


krishna
நவ 24, 2024 21:29

ANTI NATIONAL MAFIA MAINO CONGRESS CAN CHANGE INDIAN NATIONAL CONGRESS AS INDIAN MUSLIM CONGRESS.ELSE THEY CAN FIGHT ELECTION IN PAKISTHAN WHERE THEY CAN WIN AND PAPPU CAN BECOME PM PAPPY AS PRESIDENT.


Duruvesan
நவ 24, 2024 19:18

சாவர்கர் பத்தி உங்க தலீவர் அசிங்கமா பேசினார், சேனா எவன் உங்களுக்கு வேலை செய்வான், ஹிந்துவை என்ன திட்டினாலும் துடைச்சி போட்டிட்டு ஓட்டு போட அவன் ஒன்னும் திராவிடன் இல்லை


BALACHANDRAN
நவ 24, 2024 19:17

பாரதிய ஜனதா கூட்டணிக்குள் நிச்சயமாக பிரச்சனை வராது ஏனென்றால் மக்கள் இவர்களை நம்பி அமோக ஒரு வெற்றியை கொடுத்து இருக்கிறார்கள் கர்நாடகாவில் குமாரசாமிக்காக விட்டுக் கொடுத்தார்கள் இவர்களுக்கு விட்டுக்கொடுக்கவில்லை பீகாரில் நிதிஷிகா விட்டுக் கொடுத்தார்கள் விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை என்பதற்கு பாரதிய ஜனதா ஒரு உதாரணம்


BALACHANDRAN
நவ 24, 2024 19:13

நம்மைப் போன்ற மனிதர்களிடையே சர்வே எடுப்பதில்லை கூட்டணி கூட மக்கள் மனநிலையை தெரிந்து வைத்திருந்தால் கூட்டணி நன்றாக இருக்கும் சந்தர்ப்பவாத கூட்டணி மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்துகிறது. ஒரு வாக்குறுதி கொடுத்தால் கூட்டணியை நம்பி செய்கிறோம் பிறகு இவரை நம்பி நாங்கள் ஓட்டு போட்டுவிட்டு அவர் வேறு கட்சிக்கு சென்று விடுகிறார் இந்த பாதிப்பு நடந்து கொண்டே தான் இருக்கிறது அவர்களுக்கு தேவையானதை வாங்கிக்கொண்டு அவர்கள் சென்று விடுகிறார்கள் அவர்களுக்கு மாற்றம் நமக்கு ஏமாற்றம்


Kumar
நவ 24, 2024 18:13

ஆமா ஒத்துழைப்பு தந்திருந்தா சும்மா கிழிச்சு தொங்கவிட்டுருப்பார்


Kavi
நவ 24, 2024 18:01

கதைகள் சொல்வது khangress கை வந்த கலை


Barakat Ali
நவ 24, 2024 17:54

தேர்தல் முடிந்த பிறகு ஒன்றை ஒன்று கடித்து குதறிக்கொள்வது - கட்சி வேறுபாடின்றி - இந்திய அரசியலில் சகஜம் ........


ஆரூர் ரங்
நவ 24, 2024 17:40

அங்கு வீர சாவர்கர் பற்றி அவரது ஊரிலேயே உங்க தலீவர் கேவலமா பேசினபோதே மக்கள் உங்க கட்சியோட சோலிய முடிச்சுட்டாங்க. (தி.மு.க கூட இங்க கொஞ்சம் உஷாராகி எம்ஜிஆர் பத்தி பேசுவதில்லை.) .எங்க எதைப் பற்றி பேசுறதுன்னு ஜெயராம் ரமேஷ் கத்துக் கொடுக்கலையா? அப்போ வாத்தியார் மேல்தான் சந்தேகமா இருக்கு..


முக்கிய வீடியோ