உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 10 ஆண்டுகளாக விடாமல் துரத்துகின்றனர்; மோசடி வழக்கில் சிக்கிய மைத்துனருக்கு ராகுல் ஆதரவு!

10 ஆண்டுகளாக விடாமல் துரத்துகின்றனர்; மோசடி வழக்கில் சிக்கிய மைத்துனருக்கு ராகுல் ஆதரவு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ராபர்ட் வதேராவின் சொத்துக்களை பறிமுதல் செய்த அமலாக்கத்துறையின் நடவடிக்கை, அரசியல் பழிவாங்கும் செயல் என்று லோக் சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் விமர்சித்துள்ளார். ஹரியானாவின் குருகிராம் நில மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை, டில்லி உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. அதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா உள்பட 10 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், அவருக்கு சொந்தமான ரூ.37.64 கோடி மதிப்பிலான 43 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bj1fe4ma&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த செயலை லோக் சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்த எக்ஸ் தளப்பதிவில், 'கடந்த 10 ஆண்டுகளாக என்னுடைய மைத்துனர் இந்த அரசால் துரத்தப்பட்டு வருகிறார். இந்த புதிய குற்றப்பத்திரிகை அரசியல் வன்முறையின் தொடர்ச்சியாகும். இது அரசியல் பழிவாங்கும் செயல். ராபர்ட் வதேரா, பிரியங்கா மற்றும் அவர்களது குழந்தைகளுடன் துணை நிற்பேன். இதுபோன்ற நெருக்கடிகளை அவர்கள் தைரியமாகவும் கண்ணியத்துடனும் எதிர்கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உண்மை கடைசியில் வெல்லும்,' எனக் குறிப்பிட்டிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Thravisham
ஜூலை 19, 2025 06:23

//உண்மை கடைசியில் வெல்லும்// ராபர்ட் வதேரா அதெப்படி திடீரென லட்சம் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து விட்டார்? அவனுடைய பேரை ராபர்ட் வதேரா காந்தினு மாத்திடுங்க இங்கே ஊழல் நிதிகள் அங்கே டூப்ளிகேட் காந்திகள்


வாய்மையே வெல்லும்
ஜூலை 18, 2025 20:04

திருடனை போலீஸ் துரத்துவது இயல்பாகவே பார்க்கவேண்டும்...பின்ன என்ன திருடனுக்கு சந்தனகாப்பு இட்டு தூக்கிவெச்சி ஆடவேணுமா ராவுளு சார் ???. முதலில் நல்ல எண்ணங்களை வளருங்கள்... அப்போதான் காங்கிரஸ் வளரும். திருடனுக்கு முட்டுக்கொடுத்தால் கட்சி அம்போ தான்


sankaranarayanan
ஜூலை 18, 2025 19:08

ராபர்ட் வதேராவின் சொத்துக்களை பறிமுதல் செய்த அமலாக்கத்துறையின் நடவடிக்கை,அரசியல் பழிவாங்கும் செயல் என்று லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் விமர்சித்துள்ளார். ஏனிப்படி மைத்துனர் என்பதற்காக வதேரா செய்த செயல்கள் நியாயமாகிவிடாது நீதி மன்றம் தனது செயலை செய்யும் இதில் யாருமே தலையிட முடியாது அரசியல்வாதிகளின் ஆதரவு இவர்களுக்கு மேலும் பல தொல்லைகளைத்தான் தரும்


சின்னப்பா
ஜூலை 18, 2025 17:21

ஊழல் தங்கள் பிறப்புரிமை என்று வாழ்பவர்கள் உங்கள் குடும்பம்!


என்றும் இந்தியன்
ஜூலை 18, 2025 16:59

அரசின் அறிவிலித்தனமான நடவடிக்கை இது விடாமல் துரத்துதல். "தவறு கண்டேன் சுட்டேன்" இது நின்றே சரியான நடவடிக்கை என்று ராவுல் வின்சி என்னும் ராகுல் காந்தி என்னும் பப்பு சொல்வதாக நினைத்தால் அது தான் சரியானது


M. PALANIAPPAN, KERALA
ஜூலை 18, 2025 15:40

37 கோடியா? 3764 கோடியா?


தத்வமசி
ஜூலை 18, 2025 14:16

முப்பதேழு கோடி அளவுக்குத் தானா ?


Senthoora
ஜூலை 18, 2025 13:54

அதானிக்காக வக்காலத்துவங்குவது, அவருக்காக போய் நாடு, நாடாக புரோக்கர் வேலைபார்ப்பவர் நாட்டைன் தலைமையக இருக்கலாமா?


V Venkatachalam
ஜூலை 18, 2025 15:55

ராகுல்க்காக தினமலர் தளத்தில் எழுதலாமா?


ராமகிருஷ்ணன்
ஜூலை 18, 2025 13:52

திருமணத்திற்கு முன்பு பின்பு உன் மைத்துனரின் சொத்து வளர்ச்சி எப்படி என்று சொல்லு பப்பு. 1000 மடங்கு சொத்துக்களை சுருட்டி வைத்துள்ளவரை E D சும்மா விடுமா. அரசியல் பழி வாங்கல் என்று சொல்ல வெக்கமா இல்லை.


Sridhar
ஜூலை 18, 2025 13:33

இவனையே ஏன் இன்னும் கைது செய்யாமல் விட்டு வச்சுருக்காங்கனு ஜனங்க எல்லாம் காண்டுல இருக்காங்க, இதுல இவன் இன்னொரு குற்றவாளிக்கு பரிதாபப்படறான் மொத்த குடும்பத்தையும் உள்ள வச்சு சுளுக்கு எடுத்தாதான் ஜனங்களுக்கு கொஞ்சமேனும் நீதி கிடைச்ச ஆறுதல் கிடைக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை