உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு; பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை; ராணுவ நாய் பாண்டம் உயிரிழப்பு

காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு; பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை; ராணுவ நாய் பாண்டம் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ராணுவ நாய் 'பாண்டம்' உயிரிழந்தது.ஜம்மு - காஷ்மீரில் சர்வதேச எல்லை வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவல் சமீபகாலமாக அதிகரித்ததை அடுத்து, நம் ராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எல்லையோர கிராமங்களில் ராணுவ வீரர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று அன்னூரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்க இன்று (அக்.,29) பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=x6q4scsu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது, நடந்த என்கவுன்டரில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாண்டம் என்ற ராணுவ நாய் உயிரிழந்தது. இந்த பாண்டம் ராணுவ நாய்க்கு 4 வயது தான். ஆனால், பயங்கரவாதிகள் துல்லியமாக கண்டறியும் திறன் உடையது. 'பாண்டம் புல்லட் தாக்கி பலத்த காயமுற்றது. சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டது' என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
அக் 29, 2024 13:27

ராணுவ நாய் பாண்டம் உயிரிழப்பு மிகுந்த வருத்தமளிக்கிறது. ஓம் ஷாந்தி. பயங்கரவாதிகளை கூண்டோடு அழிக்கவேண்டும்.


புதிய வீடியோ