உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்னும் 7,000 கோடி ரூபாய் பாக்கி; விஜய் மல்லையா புகாருக்கு வங்கிகள் மறுப்பு

இன்னும் 7,000 கோடி ரூபாய் பாக்கி; விஜய் மல்லையா புகாருக்கு வங்கிகள் மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தொழிலதிபர் விஜய் மல்லையா வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை இன்னும் 7,000 கோடி ரூபாய் பாக்கி உள்ளதாக, வங்கிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை நடத்திய தொழிலதிபர் விஜய் மல்லையா, பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் ஏற்பட்ட நிலையில் இந்தியாவை விட்டு தப்பி ஓடினார். பிரிட்டனில் தஞ்சம் புகுந்துள்ள அவர், இந்தியா வந்தால் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் தொடர்ந்து அங்கேயே வசித்து வருகிறார். இந்நிலையில், அவரது நிறுவனங்கள் சார்பில் பெறப்பட்ட கடனுக்காக, உத்தரவாதமாக தரப்பட்டிருந்த அவரது சொத்துக்கள் ஏலத்தில் விடப்பட்டன. இதன் மூலம் அவர் பெற்றிருந்த கடன் தொகையின் ஒரு பகுதி அடைக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் லண்டனில் சமீபத்தில் பேட்டி அளித்த விஜய் மல்லையா, பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.தான் வங்கிகளுக்கு 6200 கோடி ரூபாய்க்கு மட்டுமே கடன் உத்திரவாதம் கொடுத்திருந்ததாகவும், இதற்காக தன்னிடம் இருந்து வங்கிகள் 14 ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து விட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். கடன் வசூல் தீர்ப்பாயத்தின் உத்தரவை இதற்கு ஆதாரமாக விஜய் மல்லையா காட்டினார். வங்கிகள் தன்னிடம் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும், ஊடகங்களில் வெளியான செய்திகள் தந்த அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.ஆனால் வங்கிகள் தரப்பில் விஜய் மல்லையா குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐ.டி.பி.ஐ., பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா ஆகியவற்றில் விஜய் மல்லையா பெற்றுள்ள கடன் தொகை தற்போது வட்டியுடன் சேர்த்து 17,781 கோடி ரூபாயாக உள்ளது. இந்த கடன் தொகையில், அவரது சொத்துக்கள் ஏலம் விடப்பட்டதன் மூலம் 10,933 கோடி ரூபாய் மட்டுமே அடைக்கப்பட்டுள்ளது.இன்னும் 6,997 கோடி ரூபாய் கடன் தொகை விஜய் மல்லையாவிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டி உள்ளது. எனவே கடன் தொகையை காட்டிலும் கூடுதலாக வசூலிக்கப்பட்டு விட்டதாக மல்லையா கூறுவது தவறு என்று வங்கியில் தரப்பில் தெரிவித்துள்ளனர்.எந்த ஒரு கடனும் முழுவதுமாக திருப்பி செலுத்தப்படும் வரை, வட்டி செலுத்தியாக வேண்டும்; அபராத வட்டியும் செலுத்த வேண்டி இருக்கும்; இதன் அடிப்படையில் இன்னும் விஜய் மல்லையா கடன் பாக்கி வைத்துள்ளவர் தான் என்று வங்கிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

அப்பாவி
ஜூன் 10, 2025 22:49

எல்லாக்கடனையும் வாராக்கடனாக்கி தள்ளுபடி செஞ்சு 20 லட்சம் கோடி வங்கிகளுக்கு 2019/லேயே குடுத்தாச்சு. இன்னும் ஏன் அழுவுறீங்க.


Muthukumar
ஜூலை 05, 2025 06:46

எந்த கடனும் தள்ளுபடி செய்யவில்லை. பொருளாதார வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்து கருத்து எழுதுங்கள்.


என்றும் இந்தியன்
ஜூன் 10, 2025 17:29

கடன் தொகை தற்போது வட்டியுடன் சேர்த்து 17,781 கோடி ரூபாயாக உள்ளது. இந்த கடன் தொகையில், அவரது சொத்துக்கள் ஏலம் விடப்பட்டதன் மூலம் 10,933 கோடி ரூபாய் மட்டுமே அடைக்கப்பட்டுள்ளது. இன்னும் ரூ 6848 பாக்கி. அதாவது அசலுடன் ஓரளவு வட்டியும் கட்டிவிட்டார். மீதி வட்டியை கட்டவில்லை இவ்வளவு நாளாய் என்று அர்த்தம் கொள்க


N Annamalai
ஜூன் 10, 2025 13:45

இவரின் பாஸ்போர்ட் விடுவிக்கப்பட வேண்டும் .அப்படி செய்தால் இவர் இந்தியா வரவாய்ப்பு உண்டு .அவர் பிரச்சனையை நேரடியாக எதிர் கொள்வார் .இவர் யாருக்கெல்லாம் பணம் கொடுத்து வெளிநாடு சென்றார் என்ற உண்மை சொல்ல வாய்ப்பு உண்டு .அவரின் அணி வெற்றி பெற்று உள்ளது .இதை காரணமாக சொல்லி வருவார் .


SUBRAMANIAN P
ஜூன் 10, 2025 13:45

விஜய் மல்லையா முதல்ல எவ்வளவு கடன் வாங்குனாரு.. அத சொல்லுங்க.. வங்கி அதிகாரிக்கு லஞ்சமா குடுத்ததையெல்லாம் சேர்த்து சொல்லப்படாது.


SUBRAMANIAN P
ஜூன் 10, 2025 13:43

அதிகாரப்பூர்வ கொள்ளைக்காரர்கள்தான் நம்மூர் வங்கிகள். ஒரே வார்த்தையில் அசிங்கமா சொல்லனும்னா ...


Raj
ஜூன் 10, 2025 13:31

அவர் வாங்கின கடனை விட அதிகமாக வருமான வரி கட்டி இருக்கிறரர் அப்பறோம் எத்தனை ஆட்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்து இருக்கிறார் அப்பறோம் 14000 கோடி சொத்துகள் பறிமுதல் செய்து உள்ளார்கள் அது மார்க்கெட் மதிப்பு 20000 கோடி யை தாண்டும். இந்த வங்கிகளுக்கு எவ்வளவு கொடுத்தாலும் இன்னும் கொடுக்க வேண்டும் என்பார்கள்


V Gandhi Rajan
ஜூன் 10, 2025 13:18

BANK ONLY RECEIVED THE ACTION MONEY. NOT MODI GOVT.


raja
ஜூன் 10, 2025 13:01

கொடுத்த பணத்த திரும்ப தரும்படி கேட்டா 2.5 வருடம் ஜெயில்ல போடுவோம் என்று இங்கே சட்டம் இயற்றி உள்ளதே. இதன்படி பார்த்தால் கொடுத்த பணத்தை திரும்ப வட்டியுடன் கேட்கும் வங்கி அதிகாரியை உள்ளே தள்ள வேண்டுமே. திருட்டு மேஜை தட்டிகள் உள்ள வரை எப்படி வேண்டுமானாலும் சட்டம் போடலாம்.


GMM
ஜூன் 10, 2025 12:00

மல்லையா பெற்ற கடன், வட்டி, அபராத வட்டி மற்றும் கடன் பெற்றது முதல் அரசுக்கு செலுத்திய மொத்த வரி, நிறுவன ஊழியர்கள் செலுத்திய வரி அரசியல் கட்சிக்கு கொடுக்க நன்கொடை போன்ற விவரங்கள் கொண்டு அரசு முடிவு செய்ய வேண்டும். மேலும் இதில் லஞ்ச தொகை சேர்க்க முடியாது. வங்கிகள் வாங்கிய டெபாசிட் பணத்திற்கு வட்டி கொடுக்க மக்கள் கடன் வாங்க வேண்டும். கடன் வாங்க ஆள் இல்லை என்றால் வட்டி நஷ்டம் ஏற்படுத்தும். வங்கிக்கு சில அதிகாரம் இருக்கும்.மல்லையா சொத்து ஏலம் விட்டபின், விடுவிக்க வேண்டும்.


சோணமுத்து
ஜூன் 10, 2025 11:35

என் தாய் பெயரில் இருந்த வுட்டை1984 வித்து 13 லட்சம் வந்தது. போன வருஷம் அதுக்கு வட்டி, குட்டி யெல்லாம் போட வெச்சு 16 லட்சம் கட்டச் சொன்னாங்க. அப்போ வித்த வுடுங்களுக்கு இண்டெக்சிங் முறைப்படி வரியே கிடையாது. இருந்தாலும் ஏமாந்தவங்க தலையில் மிளகாய் அரைப்பதில் ரொம்ப திறமை சாலிகள்.


முக்கிய வீடியோ