உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இது நாங்கள் போட்ட திட்டம்: மோடி பிரசாரத்தில் நிதீஷ் பங்கேற்காததற்கு பாஜ பதில்

இது நாங்கள் போட்ட திட்டம்: மோடி பிரசாரத்தில் நிதீஷ் பங்கேற்காததற்கு பாஜ பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பீஹார் சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடி பங்கேற்ற, பேரணி, பிரசாரம் மற்றும் தேர்தல் கூட்டங்களில் முதல்வர் நிதீஷ்குமார் பங்கேற்காதது குறித்து பாஜ விளக்கமளித்துள்ளது.பீஹார் சட்டசபைக்கு முதற்கட்ட தேர்தல் நவ.,6 ல் நடந்து முடிந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் நாளை ( நவ.,11) நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளது. இதனிடையே தேர்தல் முன்னிட்டு பீஹார் மாநிலத்தில் பல இடங்களில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் நிதீஷ்குமார் ஆகியோர் தனித்தனியே பிரசாரம் செய்தனர். இது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. நிதீஷ்குமாருக்கு மீண்டும் முதல்வர் பதவியை பாஜ வழங்காது எனக் குற்றம்சாட்டின.இந்நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது: தேர்தலுக்கு முன்னர், பீஹார் அரசு ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளில் முதல்வர் நிதீஷ்குமார் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி பங்கேற்றார். சமஸ்திபூரில் கடந்த 24 ம் தேதி நடந்த பிரசார கூட்டத்திலும் பிரதமர் மோடி, நிதீஷ்குமார், சிராக் பஸ்வான், உபேந்திர குஷ்வாஹா ஆகியோர் ஒன்றாக மேடை ஏறினர். அனைவரும் தனித்தனியே பிரசாரத்தை நடத்துவது என நாங்கள் முடிவு செய்தோம். அது தான் எங்களின் திட்டம்.

முதல்வர் வேட்பாளர்

முதல்வர் வேட்பாளர் குறித்து பிரதமர் மோடி தெளிவாக கூறிவிட்டார். முதல்வர் பதவி காலியாக இல்லை என ஏற்கனவே கூறிவிட்டார். அப்படி இருக்கும் போது தற்போதைய முதல்வர் பெயரை கூற வேண்டும். முதல்வர் வேட்பாளர் நிதீஷ்குமார் தான். இதில் என்ன குழப்பம் உள்ளது. எங்களிடம் எந்த பிரச்னையும் இல்லை. எங்களின் முதல்வர் வேட்பாளர் நிதீஷ்குமார் தான். இவ்வாறு அவர் கூறினார்.

ராகுலுக்கு தெரியாது

மேலும் மாணவர்கள் போராட்டம் தொடர்பாக ராகுல் தெரிவித்த கருத்து குறித்து தர்மேந்திர பிரதான் கூறியதாவது: ராகுல் பிறக்கும்போதே தங்கக் கரண்டியுடன் செல்வாக்காக( Born with golden Spoon) பிறந்தவர். நாட்டை பற்றி அவருக்கு தெரியாது. மாணவர்கள் போராட்டத்தை நெரித்தவர்கள் தற்போது அவர்களுக்கு அறிவுரை வழங்குகின்றனர். அவர்களின் உரிமை என்ன? தேர்தலை சந்திக்கும் அவர்கள் தோல்வியையே தழுவுகின்றனர்.எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கொண்டு அரசியலமைப்பு நகலை கிழித்தது ஏன்? அரசியலமைப்பு, தேர்தல் கமிஷன், சுப்ரீம் கோர்ட் மற்றும் பாதுகாப்பு படையினரை விமர்சிக்க அவருக்கு உரிமை உள்ளதா?. தேர்தல் கமிஷன் அரசியல்சாசன அமைப்பு. வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு தீவிரப்பணி இதற்கு முன்னரும் நடந்துள்ளது. முன்னாள் தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா மற்றும் நீதிமன்றம் கூறியது ராகுலுக்கு மறந்துவிட்டதா? ராகுல் செல்வாக்கு மிக்க குடும்பத்தில் இருந்து வந்தவர். தான் சொல்வது நடக்க வேண்டும் என அவர் நினைக்கிறார். ஆனால், அவரது ஆணவத்தை இளைஞர்கள் உடைக்கின்றனர். இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

திகழ்ஓவியன்
நவ 10, 2025 18:46

ECS+CBI+IT+ED+விஜய்+SIR+பாஜக+அதிமுக I இப்படி எத்துணை பேர் சேர்ந்து வந்தாலும் DMK வெற்றி உறுதி


rama adhavan
நவ 10, 2025 19:16

ஊழல் +டாஸ்மாக் +நாத்திகம் +பெரும்பான்மை மக்களை மதிக்காது இருத்தல் + முன்னேற்றமே இல்லாமை + மக்கள் வெறுப்பு ÷ஹிந்துக்கள் கலாச்சாரத்தை இகழ்ந்தது +இதர, இவை வெற்றி பெற விடாது போல் இருக்கிறதே.


Field Marshal
நவ 10, 2025 19:45

200 க்கு எப்படியெல்லாம் பல்லு படாம குச்சி ஐஸ் சாப்பிடுவது ?


SUBBU,MADURAI
நவ 10, 2025 20:07

ஏலே திடல் ஓவியா அதெப்பிட்றா பாஜக பற்றிய செய்தியை பார்த்தவுடன் முட்டுச் சந்துல இருந்தாலும் உடனே திமுகவிற்கு முட்டுக் கொடுக்க முண்டியடிச்சிகிட்டு ஓடி வந்துடுற...


திகழ்ஓவியன்
நவ 10, 2025 18:37

ஹா ஹா புட்டுக்கிச்சா இப்போவே ரிசல்ட் AAGAYA HAI


Field Marshal
நவ 10, 2025 19:46

இப்படியே தான் ஹரியானா தேர்தல் ரிசல்ட்டுக்கு முன் சிரிச்சாங்க ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை