உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் தாக்குதல் நடத்தியவர்கள் தண்டனையில் இருந்து தப்பிவிடக்கூடாது: சசிதரூர்

டில்லியில் தாக்குதல் நடத்தியவர்கள் தண்டனையில் இருந்து தப்பிவிடக்கூடாது: சசிதரூர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' டில்லியில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பிவிடக்கூடாது '', என காங்கிரஸ் எம்பி சசி தரூர் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது: பயங்கரவாத தாக்குதல் விஷயத்தில் அரசு என்ன செய்யும் என்று நான் யோசிக்க விரும்பவில்லை. ஆனால், பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்கள் தண்டிக்கப்படாமல் இருக்கக்கூடாது. குற்றவாளிகள் வேட்டையாடப்படுவார்கள் என்று அரசு கூறியுள்ளது. குண்டுவெடிப்பில் அவர்களில் சிலர் இறந்தனர் என்பது நமக்கு தெரியும். சில திட்டங்கள் நன்கு திட்டமிடப்பட்டது. அவற்றில் சில தடுக்கப்பட்டுள்ளன. அதற்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஆனால், மிக முக்கியம் நமது குடிமக்களை பாதுகாக்க வேண்டியது. ஆப்பரேஷன் சிந்தூரின் போது ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு ஒரு இலக்காக இருந்தது. மக்களின் உயிர்களை காக்க விரும்புபவர்களிடம் இருந்து பயங்கரவாதிகளுக்கு எந்த மன்னிப்பும், பாதுகாப்பும் கிடைக்காது. டில்லியில் நடந்தது பயங்கரவாத தாக்குதல் என அரசு அறிவித்துள்ளதை வரவேற்கிறேன் இந்த விஷயத்தில் நாம் ஒற்றுமையாக நிற்பது முக்கியம். நாம் விழிப்புடன் இருப்பதுடன், இந்திய குடிமக்கள் என்ற நிலையில் சட்டம் ஒழுங்கை அமல்படுத்துபவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று பார்ப்போம். இவ்வாறு சசி தரூர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

vadivelu
நவ 14, 2025 06:32

அவிங்க ஒட்டு வங்கியின் வேறாக இருந்தால் ...


Ramesh Sargam
நவ 14, 2025 00:05

முதலில் அவர்களுக்கு ஆதரவு கொடுத்தவர்களும், அடைக்கலம் கொடுத்தவர்களும் மிக மிக கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.


சமீபத்திய செய்தி