உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நம் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள்... ராஜ வாழ்க்கை!: பாகிஸ்தானில் கொடிகட்டிப் பறப்பது அம்பலம்

நம் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள்... ராஜ வாழ்க்கை!: பாகிஸ்தானில் கொடிகட்டிப் பறப்பது அம்பலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உலகளவில் தேடப்படும் பயங்கரவாதிகளில் ஏழு பேர், நம் அண்டை நாடான பாகிஸ்தானில், அந்நாட்டு ராணுவத்தின் முழு பாதுகாப்போடு சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர் நம் நாட்டிலும், வெளிநாடுகளிலும் ஆயிரக்கணக்கான மக்களை கொன்ற இவர்கள், எந்த பயமுமின்றி ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.நம் அண்டை நாடான பாகிஸ்தான், பயங்கரவாதிகளின் புகலிடமாக உள்ளது. பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் உட்பட, அந்நாட்டின் பல்வேறு இடங்களில் பயங்கரவாதிகள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர்.இவர்களுக்கு ஆயுதங்களை வழங்கும் பாக்., ராணுவத்தினர், நிதியுதவியும் அளித்து வருகின்றனர். மேலும், பயங்கரவாதிகளுக்கு ராணுவ பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச எல்லை வழியாக நம் நாட்டுக்குள் ஊடுருவும் பாக்., பயங்கரவாதிகள், ஜம்மு - காஷ்மீரின் பல்வேறு இடங்களில் நாசவேலைகளில் ஈடுபடுவதோடு, ஹிந்துக்களை குறிவைத்து தாக்குதலும் நடத்தி வருகின்றனர். கடந்த ஏப்., 22ல், பஹல்காமில் பாக்., பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான டி.ஆர்.எப்., எனப்படும் 'தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்' பொறுப்பேற்றது. இந்த அமைப்பை பயங்கரவாத இயக்கமாக அமெரிக்கா அறிவித்துள்ளது.https://x.com/dinamalarweb/status/1946730622095171618கடந்த ஏப்., 22ல், பஹல்காமில் பாக்., பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான டி.ஆர்.எப்., எனப்படும் 'தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்' பொறுப்பேற்றது. இந்த அமைப்பை பயங்கரவாத இயக்கமாக அமெரிக்கா அறிவித்துள்ளது.இந்நிலையில், நம் நாடு மற்றும் வெளிநாடுகளில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்ற, உலகின் மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகளில் ஏழு பேர், பாகிஸ்தானில் ஆயுதமேந்திய பாதுகாப்புடன் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

யார் அவர்கள்?

ஹபீஸ் சயீத்லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஹபீஸ் சயீத், நம் நாட்டில் நடந்த பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாகச் செயல்பட்டவர். கடந்த, 2006ல், மஹாராஷ்டிராவின் மும்பையில் பயணியர் ரயில்களில் நடந்த குண்டு வெடிப்பு, 2008 மும்பை தாக்குதல் சம்பவங்கள் இதில் அடங்கும். இந்த இரண்டு தாக்குதல்களில் மட்டும் 360க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும், 2000ம் ஆண்டில், தலைநகர் டில்லியில் உள்ள செங்கோட்டையையும், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் தாக்கினர். இந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹபீஸ் சயீத், அமெரிக்கா மற்றும் ஐ.நா., சபையால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். இவரை பற்றி தகவல் தெரிவிப்போருக்கு, 86 கோடி ரூபாய் சன்மானம் தரப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தானின் லாகூரில், உச்சபட்ச பாதுகாப்புடன் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் ஆடம்பரமாக வாழ்கிறார்.

ஜாகியுர் ரெஹ்மான் லக்வி

முஸ்லிம் மத போதகரான ஜாகியுர் ரெஹ்மான் லக்வி, லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவர். 2008 மும்பை தாக்குதலுக்கு 'ஸ்கெட்ச்' போட்டு கொடுத்தவரும் இவர் தான். பாக்., சிறையில் சிறிது காலம் இருந்த அவர், பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். தற்போது மற்ற பயங்கரவாதிகளை போல ஜாகியுர் ரெஹ்மான் லக்வியும் சுதந்திரமாக சுற்றித்திரிகிறார். இவருக்கு பாக்., ராணுவம் மற்றும் சீனாவின் பாதுகாப்பு இருப்பதாக நம்பப்படுகிறது.

சையத் சலாவுதீன்

ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைவரான இவர், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், நம் நாட்டுக்கு எதிராக பேரணிகளை நடத்தி வருகிறார். 

தாவூத் இப்ராஹிம்

நிழல் உலக தாதா என அறியப்படும் தாவூத் இப்ராஹிம், உலகின் மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகளில் ஒருவர். கொலை, மிரட்டி பணம் பறித்தல், போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாத வழக்குகளில் இவர் தேடப்படுகிறார். மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் இவருக்கு தொடர்புள்ளது. சர்வதேச பயங்கரவாதியான தாவூத் இப்ராஹிம் பற்றி தகவல் தெரிவிப்போருக்கு, 200 கோடி ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள அவர், அந்நாட்டின் ஆயுதப்படைகளின் பாதுகாப்பின் கீழ், எந்தவித பாதிப்பும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்.

மசூத் அசார்

ஜெய்ஷ்- இ-முஹமது பயங்கரவாத அமைப்பின் தலைவரான மசூத் அசார், பாக்., ராணுவத்தின் பலத்த பாதுகாப்போடு வாழ்ந்து வருகிறார். ஜம்மு - காஷ்மீரின் உரி, புல்வாமா பயங்கரவாத தாக்குதல்களை திட்டமிட்டு செயல்படுத்தியவர் இவர். இந்த தாக்குதல்களில், நம் பாதுகாப்பு படை வீரர்கள் 60 பேர் வீரமரணம் அடைந்தனர். ஐ.நா., சபையால், 2019ல், சர்வதேச பயங்கரவாதியாக மசூத் அசார் அறிவிக்கப்பட்டார். அவரை கைது செய்வதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. ஆனால், தங்கள் நாட்டில் மசூத் அசார் இல்லை என, பாக்., பொய் கூறி வருகிறது. பாகிஸ்தானின் பஹவல்பூரில் இருந்து மசூத் அசார் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக, உளவுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையில் தாக்கப்பட்ட பயங்கர வாத முகாம்களில் இதுவும் ஒன்று. இவர்களை தவிர, இந்தியன் முஜாஹிதீன் என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இக்பால் பட்கல், அவரது சகோதரர் ரியாஸ் பட்கல் ஆகியோரும் கராச்சியில் உள்ளனர். இவர்கள், நம் நாட்டில் 'ஸ்லீப்பர் செல்'களை ஒருங்கிணைக்கின்றனர். இவர்களை போல, பல்வேறு பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் பதுங்கி உள்ளனர். நம் நாட்டின் அமைதியை கெடுப்பதே இவர்களின் நோக்கம். பாக்., புகலிடம் கொடுக்கும் வரை அவர்களின் நாசவேலை தொடரும். பாக்., திருந்தினால் தான், பயங்கரவாதிகளின் ஆட்டம் அடங்கும். ஆனால் பாகிஸ்தானும் திருந்தப் போவதில்லை; பயங்கரவாதிகளும் அடங்கப் போவதில்லை. நம் படைகளும் அவர்களை விட்டு வைக்கப் போவதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

V RAMASWAMY
ஆக 13, 2025 19:31

உண்மையிலேயே தேசப்பற்று உள்ள இங்கிருக்கும் நம் நாட்டு இஸ்லாமிய நண்பர்கள் திரு ஒவைசி அவர்கள் பேசுவது போல் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் தக்க நடவடிக்கை எடுக்க அந்த நாட்டை வலியுறுத்த வேண்டும்.


shakti
ஜூலை 29, 2025 16:00

தீவிரவாதிகளுக்கு அவர் இவர்னு மரியாதையை எல்லாம் பலமா இருக்கு ???


K.Rajasekaran
ஜூலை 29, 2025 05:08

மற்றும் இந்தியாவில் காங்கிரஸ் முக்கிய புள்ளிகள் ப. சி , மற்றும் பலர் .


தேவதாஸ் புனே
ஜூலை 20, 2025 16:30

அவர்கள் வாழும் இடங்களை நோட்டமிட்டு சரியான நேரம் குறித்து சரியாக அவர்களை மட்டும் போட்டுத்தள்ளலாம்.....


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 20, 2025 12:49

இதை இந்தியா எப்படி அணுகணும்? பாகிஸ்தான் மக்களை நாம கேட்கணும்.. எங்களோட சேர்ந்துதான் சுதந்திரம் வாங்குனீங்க.. உங்க நாட்டுல பயங்கரவாதிகள் வாழுற அளவுக்கு உங்களால பிஸ்தாவா வாழ முடியுதா?


Santhakumar Srinivasalu
ஜூலை 20, 2025 10:37

இன்னொரு சிந்தூர் ஆபரேசன் நடத்தினால் தான் உலகமே இந்தியாவை பாராட்டும்!


Sudha
ஜூலை 20, 2025 10:01

இவர்களை பிடிக்காமல் ஒப்படைக்க கேட்காமல் போரை முடித்துள்ளோம். அரைகுறையாக அடிக்கப்பட்ட பாம்புகள் எப்போதும் ஆபத்தானவை


ராமகிருஷ்ணன்
ஜூலை 20, 2025 09:28

அவர்கள் வாழும் இடங்களை மிக சரியாக கண்காணித்து சின்ன சைஸ் அணுகுண்டு போடலாமே. உலக நாடுகள் அனைத்தும் பாராட்டுவார்கள்


Guru
ஜூலை 20, 2025 09:02

இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் சிலரும் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்கின்றனர்.


ஓவிய விஜய்
ஜூலை 20, 2025 09:00

போட்டு தள்ள வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை