உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தொடர்ந்து அச்சுறுத்தும் அழைப்புகள்: 50 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தொடர்ந்து அச்சுறுத்தும் அழைப்புகள்: 50 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: இன்று 50 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு வந்துள்ளதாக விமானத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.சமீப நாட்களாக, இந்திய விமான நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்திருக்கின்றன. இதனால், விமானங்களின் வழித்தடங்கள் மாற்றப்படுகின்றன, விமானப் பயணங்கள் தாமதமாகின்றன. இது நாட்டிற்கும் மக்களுக்கும் மிகப்பெரிய பிரச்னைகளை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து விமானத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:இந்திய விமான நிறுவனங்களின் 50 உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு இன்று மட்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. நேற்று இரவு முதல் அச்சுறுத்தல்களைப் பெற்ற மொத்த விமானங்களின் எண்ணிக்கை சுமார் 80 ஆக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் மட்டும் 169 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் அழைப்புகள் வந்திருக்கின்றன.ஏர் இந்தியா மற்றும் இண்டிகோவின் தலா 13 விமானங்களும், ஆகாசா ஏரின் 12 விமானங்களும், விஸ்தாராவின் 11 விமானங்களும் அச்சுறுத்தல்களைப் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.திங்கள்கிழமை இரவு, ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் விஸ்தாராவின் தலா 10 விமானங்களுக்கு அச்சுறுத்தல் வந்துள்ளது, மூன்று ஜெட்டாவுக்குச் செல்லும் இண்டிகோ விமானங்கள், சவுதி அரேபியா மற்றும் கத்தாரில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.இவ்வாறு விமானத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.வெடிகுண்டு மிரட்டலை தடுக்க மத்திய அரசு, மேற்கொண்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
அக் 22, 2024 20:53

ஒவ்வொருமுறை இப்படி வெடிகுண்டு மிரட்டல் விமான நிலையங்களுக்கு வரும் போதும், விமான நிலையம் பல லட்சங்களை செலவழிக்கிறது விமானத்தை பரிசோதிக்க, விமான நிலையங்களை சோதிக்க. இதுவரை ஒரு மிரட்டல் விடுத்த வரும் பிடிக்கப்பட்டு சரியாக தண்டிக்கப்படவில்லை. ஒரு சிலரை பிடித்து கடுமையாக தண்டிக்கவேண்டும். இல்லையென்றால் மிரட்டல்கள் தொடரும். விமான நிலையங்கள் நஷ்டத்தில் இயங்கும் நிலைமைக்கு வரும்.


Palanisamy Sekar
அக் 22, 2024 20:25

காலிஸ்தான் தீவிரவாதிகள் கனடாவிலிருந்துகொண்டு இதனை செய்கின்றார்கள் போலும். அதேசமயம் இஸ்ரேல் எதிர்ப்பாளர்களின் ஈடுபாடும் கூட இருக்க சந்தர்ப்பம் உள்ளது. இப்படியே சொல்லி சொல்லி, பின்னர் இது வெறும் மிரட்டல் என்று நினைத்து விட்டுவிட்டால் ஒருநாள் இந்த மிரட்டல்கள் உண்மையாகி விடக்கூடும். அதனால் விமான நிலையங்களில் மக்கள் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். அதே சமயம் சந்தேகப்படுகின்ற நபர்களை போலீசுக்கு தகவல்கள் மூலம் தெரிவிக்க தயங்கவே கூடாது. குப்பைகளுக்கு வேறுவேலை இல்லை போலும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை