உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நர்ஸிடம் ரூ.16 லட்சம் மோசடி செய்த மூவர் கைது

நர்ஸிடம் ரூ.16 லட்சம் மோசடி செய்த மூவர் கைது

புதுடில்லி:'ஆன் - லைன்' வாயிலாக வேலை வாய்ப்பு எனக்கூறி, நர்ஸிடம் 16 லட்சம் ரூபாய் மோசடி செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். புதுடில்லி திலக் நகரில் வசிக்கும் நர்ஸ் ஒருவர், சமூக ஊடகத்தில் வந்த 'ஆன்லைன்' வேலைவாய்ப்பு விளம்பரத்தைப் பார்த்து, அதில் குறிப்பிட்டிருந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டார். எதிர்முனையில் பேசியவர், அதிக வருமானம் கிடைக்கும் வகையில் முதலீடு செய்ய ஆலோசனை கூறினார். அதை நம்பிய நர்ஸ், 15.94 லட்சம் ரூபாயை பல்வேறு பரிவர்த்தனைகளில் அனுப்பினார். ஆனால், அதற்குப் பின், அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து, சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி, சபீர் அஹமது,43, முஹமது சர் பராஸ்,32, மற்றும் முஹமது தில்ஷாத்,20, ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். மூவரும் சீன நாட்டைச் சேர்ந்த ஒரு மோசடிக் குழுவுடன் தொடர்பில் இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதில், தில்ஷாத் கல்லுாரியில் படித்து வருகிறார். மூவரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ