வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மணிப்பூரில் எப்பொழுதும் இயல்பு நிலை திரும்பவும் தெரியவில்லை. மக்களை பார்ப்பதற்கு பரிதாபமாக இருக்கிறது வன்முறைகள் நடப்பதை கண்டிக்கும் போது தோன்றுகிறது
மேலும் செய்திகள்
மணிப்பூரில் ஆயுதங்கள் பறிமுதல்
30-Aug-2024
இம்பால்: மணிப்பூரில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பல ஐ.இ.டி., வகை குண்டுகள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில், முதல்வர் பைரேன் சிங் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, 2023 மே மாதம் நடந்த கலவரத்துக்கு பின், படிப்படியாக இயல்புநிலை திரும்பி வந்த நிலையில், தற்போது மீண்டும் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. மணிப்பூரில் இயல்பு நிலையை உருவாக்க, அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனாலும், மெய்டி மற்றும் கூகி இன மக்களுக்கு இடையே மோதல்போக்கை தடுத்த நிறுத்தி முடியவில்லை. அரசியல் கட்சி தலைவர்கள் முதல் அப்பாவி மக்கள் வீடு வரை பல்வேறு இடங்களில் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் நடந்து வருகிறது.3 பேர் கைது
இந்நிலையில், இன்று (செப்.,20) மணிப்பூரில் இம்பால் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் பாதுகாப்பு படையினரால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்த, ப்ரோன்சன் சிங்,24, லான் சென்பா,21, மற்றும் நோங்போங்கன்பா ,52, ஆகிய 3 பேரைபோலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பல ஐ.இ.டி., வகை குண்டுகள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. 33 கிலோ வெடிமருந்து
இம்பாலின் கிழக்கில் உள்ள ராணுவமும், மணிப்பூர் போலீசாரும் நடத்திய அதிரடி நடவடிக்கையில், 28.5 கிலோ எடை உள்ள வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இம்பாலின் கிழக்கில் உள்ள சாய்சாங் மலைப்பகுதியில் இந்திய ராணுவத்தின் வெடிகுண்டு செயலிழப்புக் குழுவால் 33 கிலோ எடையுள்ள எட்டு ஐ.இ.டி., வகை குண்டுகள் மீட்கப்பட்டு செயல் இழக்கப்பட்டது.
மணிப்பூரில் எப்பொழுதும் இயல்பு நிலை திரும்பவும் தெரியவில்லை. மக்களை பார்ப்பதற்கு பரிதாபமாக இருக்கிறது வன்முறைகள் நடப்பதை கண்டிக்கும் போது தோன்றுகிறது
30-Aug-2024