உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துப்பாக்கிச்சூடு நடத்திய மூன்று பேர் கைது

துப்பாக்கிச்சூடு நடத்திய மூன்று பேர் கைது

துவாரகா: துப்பாக்கிச் சூடு தொடர்பாக கலா ஜாதேரி கும்பலைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.கடந்த 16ம் தேதி நஜாப்கரின் விநோபா என்க்ளேவில் உள்ள ஒரு தொழிலதிபர் வீடு மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பினர். புகாரின்பேரில் சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரித்து வந்தனர்.இந்த நிலையில், கலா ஜாதேரி கும்பலைச் சேர்ந்த மோஹித், மணீஷ், பிரவீன் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.இவர்கள், கலா ஜாதேரியின் நெருங்கிய கூட்டாளியான ஓம் பிரகாஷ் கலாவின் உத்தரவுப்படி துப்பாக்கிச்சூடு நடத்தியது விசாரணையில் தெரிய வந்தது.இதற்கான காரணம் குறித்து விசாரிக்க ஓம் பிரகாஷ் கலாவை போலீஸ் காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை