உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.70 லட்சம் ஹவாலா பணம் 200 கிராம் தங்க நகை பறிமுதல் கோவையை சேர்ந்த மூவர் கைது

ரூ.70 லட்சம் ஹவாலா பணம் 200 கிராம் தங்க நகை பறிமுதல் கோவையை சேர்ந்த மூவர் கைது

பாலக்காடு:பாலக்காடு, வேலந்தாவளத்தில் வாகன சோதனையின் போது, ரூ. 70 லட்சம் ஹவாலா பணம் மற்றும் 200 கிராம் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்ட எஸ்.பி., அஜித்குமாரின் அறிவுரையின்படி, சித்தூர் டி.எஸ்.பி., கிருஷ்ணதாஸ் மேற்பார்வையில், கொழிஞ்சாம்பாறை இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமையிலான போலீசார், போதை தடுப்பு பிரிவினர் இணைந்து, நேற்று அதிகாலை வேலந்தாவளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, கோவையில் இருந்து கேரளா நோக்கி வந்த, இரு பைக்குகளை நிறுத்தி, அதில் பயணித்த மூவரை சோதனை செய்தனர். அப்போது, பிரத்யேக மாக தயாரித்த உள்ளாடைக்குள் எந்தவித ஆவணமும் இன்றி, 70 லட்சம் ரூபாய் ஹவாலா பணம், மற்றும் 200 கிராம் எடை கொண்ட தங்க நகைகளையும் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து, நடத்திய விசாரணையில் அவர்கள் கோவையை சேர்ந்த சாகர், 32, மணிகண்டன், 40, சந்தீப், 35 ஆகியோர் என்பதும், தங்க வியாபாரம் தொடர்பாக கேரள மாநிலம் திருச்சூர் பட்டிக்காடு பகுதியை சேர்ந்தவருக்கு கொடுப்பதற்காக பணம் மற்றும் தங்க நகைகளை கடத்தி செல்வதும் தெரிந்தது. இது தொடர்பாக, மூவரை கைது செய்த போலீசார், இரு பைக்குகளை பறிமுதல் செய்தனர். தொடர் விசாரணைக்காக, ஹவாலா பணம் மற்றும் தங்க நகைகளை வருமான வரித்துறையிடம் போலீசார் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை