மேலும் செய்திகள்
காவிரி ஆற்றில் மூழ்கி தாத்தா, 2 பேரன் பலி
16-Mar-2025
தாவணகெரே: தாவணகெரே மாவட்டம், சென்னகிரி தாலுகாவின், லட்சுமி சாகரா கிராமத்தில் வசித்தவர் திவ்யா, 26. இவருக்கு திருமணமாகி, ஒரு குழந்தை உள்ளது. இவரது தங்கை சந்தனா, 19.இவர்களின் பக்கத்து வீட்டில் வசித்தவர் தீபா ராணி, 30. இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். நேற்று மதியம் திவ்யா, சந்தனா, தீபா ராணி ஆகிய மூவரும், துணி துவைப்பதற்காக, கிராமத்தின் அருகில் உள்ள ஏரிக்கு சென்றனர்.தீபா ராணியும், திவ்யாவும் துணி துவைத்துக் கொண்டிருந்தனர். சந்தனா நீச்சலடிப்பதற்காக ஏரிக்குள் இறங்கினார். அப்போது சேற்றில் சிக்கிக் கொண்டார். இதை பார்த்த திவ்யா, தங்கையை காப்பாற்ற இறங்கினார்; அவரும் சேற்றில் சிக்கினார். இவர்களை காப்பாற்ற தீபா ராணி முயற்சித்தார். மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.தகவல் அறிந்து அங்கு வந்த சென்னகிரி போலீசார், தீயணைப்பு படையினர் உதவியுடன், மூவரின் சடலங்களையும் வெளியே எடுத்தனர். சென்னகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
16-Mar-2025