உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரம்மபுத்ரா நதியில் அணை கட்டும் சீனா: அருணாச்சல பிரதேச முதல்வர் எச்சரிக்கை

பிரம்மபுத்ரா நதியில் அணை கட்டும் சீனா: அருணாச்சல பிரதேச முதல்வர் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இடா நகர்: '' பிரம்மபுத்ரா நதியில் சீனா மிகப்பெரிய அணை கட்டி வருகிறது. இதனை அந்நாடு ' தண்ணீர் வெடிகுண்டு' ஆக பயன்படுத்தக்கூடும்'', என அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு கூறியுள்ளார்.சீனாவின் திபெத் பகுதியில் பிரம்மபுத்ரா நதி உருவாகிறது. அங்கு, இந்த நதிக்கு 'யார்லுங் சாங்போ' என்று பெயர். இந்தியாவில் நுழையும் போது பிரம்மபுத்ரா என்ற பெயரில் இந்த நதி பெயர் பெறுகிறது. இந்த நதியின் குறுக்கே சீனா உலகின் மிகப்பெரிய அணையை கட்டி வருகிறது.இது தொடர்பாக அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு பி.டி.ஐ., செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: பிரம்மபுத்ரா நதியில் சீனா உலகின் மிகப்பெரிய அணையை கட்டி வருகிறது. இது கவலைக்குரிய விஷயம். சீனா நம்பகமான நாடு கிடையாது. அந்நாடு என்ன செய்யும் என யாருக்கும் தெரியாது. சீனாவின் ராணுவ அச்சுறுத்தலை தாண்டி, வேறு எதையும் விட இது மிகப்பெரிய பிரச்னையாக எனக்கு தோன்றுகிறது. இது நமது பழங்குடியினருக்கும், நமது வாழ்வாதாரத்துக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தப் போகிறது. இது தீவிரமான பிரச்னை. இதனை ஒரு வகையான, ' தண்ணீர் வெடிகுண்டாக' கூட சீனா பயன்படுத்தலாம்.சர்வதேச நீர் பகிர்வு ஒப்பந்தங்களில் சீனா கையெழுத்து போட்டு இருந்தால், அருணாச்சலப் பிரதேசம், அசாம் மற்றும் வங்கதேசத்தில் கோடை காலத்தில் ஏற்படும் வெள்ளத்தை தடுக்கும் என்பதால், இந்த திட்டம் முக்கியமானதாக இருந்து இருக்கும். ஆனால், சீனா கையெழுத்து போடவில்லை. இதுதான் பிரச்னை. அணை கட்டிய பிறகு, சீனா திடீரென தண்ணீரை திறந்துவிட்டால், நமது சியாங் பகுதி பேரழிவை சந்திக்கும். ஆதிவாசியினர், தங்களது நிலத்தையும், சொத்துக்களையும் இழக்க நேரிடும். மனிதர்கள் பேரழிவை சந்திக்க வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
ஜூலை 10, 2025 08:09

சீனா நம்பகமான நாடு கிடையாது ஹை. ஆனா சீன இறக்குமதி அதிகரிச்சுக்கிட்டே போகுது ஹை.