உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உயிர் போராட்டத்தில் பசியை மறந்தது புலி; பகையை மறந்தது காட்டுப்பன்றி; ம.பி.,யில் நடந்த சம்பவம்

உயிர் போராட்டத்தில் பசியை மறந்தது புலி; பகையை மறந்தது காட்டுப்பன்றி; ம.பி.,யில் நடந்த சம்பவம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: ம.பி.,யில் காட்டுப்பன்றியும், அதனை உணவுக்காக துரத்தி வந்த புலியும் கிணற்றுக்குள் விழுந்தன. இயற்கையிலேயே எதிரிகளான இந்த இரண்டும், கிணற்றுக்குள் சண்டையிடாமல் அருகருகே அமைதியாக இருந்தது வன ஆர்வலர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. ம.பி., மாநிலம் பெஞ்ச் புலிகள் காப்பகம் அருகே பிபாரியா கிராமம் உள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து காட்டுப்பன்றி ஒன்றை, புலி உணவுக்காக துரத்தி வந்தது. ஆனால் அந்த காட்டுப்பன்றி புலியிடம் சிக்காமல் இருக்க கிராமத்திற்குள் நுழைந்து அங்கிருந்த கிணற்றில் விழுந்தது. இதனை துரத்தி வந்த புலியும் கிணற்றுக்குள்ளேயே விழுந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ssk3ss6z&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆனால், இரைக்காக துரத்தி வந்த காட்டுப்பன்றி அருகில் இருந்தும், கிணற்றுக்குள் விழுந்து விட்டதால் புலி அமைதியாக இருந்தது. பக்கத்தில் இருந்த காட்டுப்பன்றியை ஒன்றும் செய்யவில்லை. காட்டு விலங்குகள் கிணற்றுக்குள் இருப்பதை அறிந்த வனத்துறை அதிகாரிகள் கூண்டுகளை உள்ளே விட்டனர். அப்போதும், கூண்டு மற்றும் புலியை காட்டுப்பன்றி சுற்றி வந்தது. அதனை புலி கண்டு கொள்ளவில்லை. பிறகு கூண்டில் வைத்து புலியையும், மரக்கட்டில் வைத்து காட்டுப்பன்றியும் மீட்கப்பட்ட வனத்துறையினர் அதனை வனப்பகுதிக்குள் விட்டனர். புலியின் செயல் வனத்துறையினர் மற்றும் விலங்கின ஆர்வலர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

jayvee
பிப் 07, 2025 10:27

இது திமுக கூட்டணி பிரச்சனையில் சமாதானம் ..அவ்வளவுதான்


Mahadevan Narayanaswamy
பிப் 06, 2025 10:36

எழுத்து பிழையை திருத்துங்கள் . கேவலமா இருக்கு ,, பாரதி அன்று சொன்னார் தமிழ் இனி மெல்ல சாகும் என்று ..


Sankare Eswar
பிப் 05, 2025 07:03

திராவிட வகை விலங்குகளை விட இப்புவிசார் இயற்கை விலங்குகள் மேலான குணம் படைத்தவை


இந்தியன்
பிப் 05, 2025 11:27

நீங்கள் மேன்மைக்குரிய யூத இனத்து சீமானா அல்லது சுத்த ரத்தம் கொண்ட ஆரிய வம்சாவழியில் வந்தவரா? இந்த மாதிரி திமிரு பேசுறதனால தாண் போற பக்கம் எல்லாம் உங்களை கல்லால் அடிக்கிறானுங்க.


rasaa
பிப் 06, 2025 16:49

இவர் கூறியதில் தவறு எதுவும் இல்லையே. இ.ந்.தி.ய.ன்.க்கு ஏன் கோபம் வருகின்றது.


Senthoora
பிப் 05, 2025 05:08

தவறு, அண்ணாதிமுகவும், பிஜேபியும்.


Saai Sundharamurthy AVK
பிப் 04, 2025 23:16

பொதுவாக இரு பூனைகள் சண்டையிடும் போது ஆஞ்சம் தண்ணீர் எடுத்து அவைகளின் மேல் ஊற்றி விட்டால், அவைகளுக்கு குளிர் எடுக்க ஆரம்பித்து விடும். பிறகு குளிரை தங்க முடியாமல் நடுக்கம் ஏற்படும். மனிதர்கள் போலத் தான். ஆனால், ஒரு சுவாரசியம் என்னவென்றால் அந்த நடுக்கம் எதிராளி பலம் வாய்ந்தது என்று ஒன்றுக்கொன்று எண்ணிக் கொள்ளும். அதனால் ஒரு வித பயம் ஏற்பட்டு ஒன்றை ஒன்று எதுவும் செய்யாமால் விலகி விடும். அது தான் இங்கும் நடந்திருக்கிறது. எல்லாம் தண்ணீர் செய்த வேலை..... ஏதோ விவேக் கமெடி போல் உள்ளது.


N Annamalai
பிப் 04, 2025 22:45

அருமை .உயிர் முக்கியம் என்று சொல்லிவிட்டு சென்று உள்ளன.


முருகன்
பிப் 04, 2025 19:32

விலங்குகளுக்கு இருக்கும் அறிவு மனிதனுக்கு இல்லை அனைத்தையும் அழிக்கின்றனர்


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 04, 2025 19:26

இப்படித்தானுங்க பாஜகவும், திமுகவும் கைகோர்த்து,செயல்படுறாங்க .....


Bye Pass
பிப் 04, 2025 21:59

கழுவிக்கிட்டா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை