உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொழுக்குமலையில் புலி: உயிர் தப்பிய பயணிகள்

கொழுக்குமலையில் புலி: உயிர் தப்பிய பயணிகள்

மூணாறு:கேரள தமிழக எல்லையில் சூரியநல்லி அருகில் -கொழுக்குமலையில் புலியை கண்ட சுற்றுலா பயணிகள் அச்சத்தில் ஓடி உயிர் தப்பினர்.கொழுக்குமலை முக்கிய சுற்றுலா பகுதி. அங்கு சூரிய உதயம், அஸ்தமனம் ஆகியவற்றை காண தினமும் ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் செல்வர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சூரிய அஸ்தமனம் காணச் சென்ற பயணிகள் சிலர் அப்பகுதியில் 'டிரக்கிங்' சென்றனர். அப்போது ஏதோ சப்தம் கேட்டு வனப்பகுதியில் பார்த்துள்ளனர். அங்கு புலி ஒன்று படுத்து இருந்ததை கண்டு அதிர்ச்சியில் பதை பதைக்க அங்கிருந்து ஓடி உயிர் தப்பினர். இக்காட்சி வைரலாகி வருகிறது. இதற்கிடையில் அப்பகுதியில் புலி, சிறுத்தை ஆகியவற்றின் நடமாட்டம் உள்ளதாக கேரள வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி