உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உலகின் டாப் நிறுவனங்கள் பட்டியல் ரீலிஸ்: எந்த நிறுவனம் சிறந்தது தெரியுமா?

உலகின் டாப் நிறுவனங்கள் பட்டியல் ரீலிஸ்: எந்த நிறுவனம் சிறந்தது தெரியுமா?

புதுடில்லி: உலகின் சிறந்த நிறுவனங்களின் பட்டியலை டைம் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் எச்.சி.எல்., டெக், அதானி குழுமம், ரிலையன்ஸ் ஆகியவை இடம்பிடித்துள்ளது.அமெரிக்காவில் இருந்து மாதம் இருமுறை வெளியாகிறது ‛டைம் ' இதழ். ‛டைம்' இதழ் சிறப்பாக செயல்பட்டு வரும் நிறுவனங்களை ஆய்வு செய்து பட்டியலை ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. இந்தாண்டிற்கான தலைசிறந்த நிறுவனங்களின் பட்டியலில், 1000 நிறுவனங்கள் உள்ளன. இதில் 22 இந்திய நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. எச்.சி.எல்., டெக் நிறுவனம் 112வது இடத்தையும், விப்ரோ நிறுவனம் 134வது இடத்தையும், அதானி குழுமம் 736வது இடத்தையும், முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனம் 646வது இடத்தையும் பிடித்துள்ளன. மகேந்திரா குழுமம் 187வது இடத்தையும், லார்சன் நிறுவனம் 549வது இடத்தையும், கீரோ மெட்ரோ கார்ப் நிறுவனம் 597வது இடத்தையும் பிடித்துள்ளன. பல வங்கி நிறுவனங்களும் பட்டியலில் சிறந்த இடத்தை பிடித்துள்ளது. அதன் விபரம்: ஆக்சிஸ் வங்கி 504வது இடத்தையும், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி 525வது இடத்தையும், கோட்டக் மஹிந்திரா வங்கி 551 இடத்தையும் பிடித்துள்ளன. டாப் நிறுவனங்கள் விவரம் பின்வருமாறு: * எச்.சி.எல்., டெக், ரேங்க்- 112, மதிப்பெண்-91.75.* இன்போசிஸ், ரேங்க்- 119, மதிப்பெண்-91.55.* விப்ரோ, ரேங்க்- 134, மதிப்பெண்-91.29.* மஹிந்திரா குரூப், ரேங்க்- 187, மதிப்பெண்-90.57.* ஆக்சிஸ் பேங்க், ரேங்க்- 504, மதிப்பெண்-86.72.* பாரத ஸ்டேட் வங்கி, ரேங்க்- 518, மதிப்பெண்-86.56.* ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, ரேங்க்- 525, மதிப்பெண்-86.43.* லார்சன் அன்ட் டூப்ரோ, ரேங்க்- 549, மதிப்பெண்-86.10.* கோடக் மஹிந்திரா பேங்க், ரேங்க்- 551, மதிப்பெண்-86.10.* ஐ.டி.சி., லிமி டெட், டெக், ரேங்க்- 586, மதிப்பெண்-85.60.* ரிலையன்ஸ், ரேங்க்- 646, மதிப்பெண்-84.87.* அதானி குரூப், ரேங்க்- 736, மதிப்பெண்- 83.72.* பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட், ரேங்க்- 987, மதிப்பெண்- 73.69.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Corporate Goons
செப் 14, 2024 13:35

இழந்தது நாட்டின் மதிப்பு , ஒட்டுமொத்த நாட்டின் பண மதிப்பு . வரலாறு காணாத கடன்.


ஆரூர் ரங்
செப் 14, 2024 14:47

சரி. சமீப காலத்தில் செலவாணி மதிப்பு அதிகரித்த ஏதாவது ஒரு நாட்டின் பெயரை சொல்லுங்க பார்ப்போம். ஜப்பான் யென் கூட டவுன்.


Anand
செப் 14, 2024 12:06

குடும்ப பெயர் மிஸ்ஸிங். சோ இந்த லிஸ்ட் சுத்த வேஸ்ட்


ஆரூர் ரங்
செப் 14, 2024 10:37

ஜகத்தையே விலைபேசக்கூடிய ஆளின் பெயரைக் காணோமே. அட பாலிடாயில் மகன், மருமகன் பெயர்கள் கூட மிஸ்ஸிங். அப்போ பட்டியல் தவறு.


Kasimani Baskaran
செப் 14, 2024 09:13

திமுகவின் சொத்துக்கள் கிடையாது. பல நாடுகளில் பினாமிகள் மூலம் செய்துள்ள முதலீட்டை கணக்கிட்டால் முதல் இரண்டு இடங்களுக்குள் வருவார்கள்.


R Hariharan
செப் 14, 2024 09:11

இதுயெல்லாம் சும்மா ஏமாற்று வேலை. யார் எவளவு பணம் கொடுக்கிறார்களோ அதன்படி மார்க் போடுகிறார்கள்.


Rajah
செப் 14, 2024 09:01

பஞ்சம் பிழைக்க வந்த திராவிடர்கள் ஆசியாவின் பெரும் பணக்காரர்கள். தமிழர்களை அவமதித்து விட்டதாக தெலுங்கர்கள் கூறுகின்றார்கள். தமிழர்களின் உணர்வுகளை விற்று பிழைக்கும் தெலுங்கர்கள் இருக்கும்வரை தமிழகம் ஒருபோதும் முன்னேறாது. ஜோதிமணி, மதிவதனி, யாழினி இவ்வாறான அழகனா தமிழ் பெயர்களை வைத்து தமிழர்களை ஏமாற்றும் திராவிடர் கூட்டம் மீது அவதானமாக இருங்கள்.


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
செப் 14, 2024 11:27

தமிழர்கள் தமிழ் மொழியை சரியாக பேசுவது இல்லை. சென்னை தமிழ் உதாரணம்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 14, 2024 08:44

ஹச்.டி. எஃப்.சி., எஸ்.பி.ஐ. மற்ற வங்கிகளை விட சிறப்பாக செயல்பட்டன. இவை இரண்டும் ரேங்க் பட்டியலில் இல்லை என்பது கொஞ்சம் இடிக்கிறது. சொல்லப்போனால் இந்தியாவின் அனைத்து வங்கிகளும் கடந்த 10 ஆண்டுகளில் மிக சிறப்பாக செயல்பட்டு தங்களின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தியதோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளன.


Bharatian
செப் 14, 2024 08:17

அமெரிக்க நிறுவனம் கூறுவது எல்லாம் உண்மையே என்ற மனப்பாங்கு தேவையில்லை ...


Rajah
செப் 14, 2024 09:15

அதானி குழுமத்தின் பெயர் பட்டியலில் இருப்பதால் செ ய்தி வைரலாகி உள்ளது ..................................................


Barakat Ali
செப் 14, 2024 09:19

சரியாகச் சொன்னீர்கள் ..... நமது மன்னர் குடும்பத்தை விட அதிகம் சம்பாதிக்கும் வணிகக் குழுமத்தை ஒரு அமெரிக்க நிறுவனம் சிறந்தது என்று பட்டியலிட்டால் எப்படி ஏற்க மனம் இடம் கொடுக்கும் ????


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை