உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மைசூரு தொகுதியில் திருப்பம் பா.ஜ., சின்னத்தில் ம.ஜ.த., போட்டி?

மைசூரு தொகுதியில் திருப்பம் பா.ஜ., சின்னத்தில் ம.ஜ.த., போட்டி?

மைசூரு: திடீர் திருப்பமாக, மைசூரு தொகுதியில் பா.ஜ., சின்னத்தில் ம.ஜ.த., வேட்பாளர் களமிறங்குவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.மைசூரு லோக்சபா தொகுதி பா.ஜ., - எம்.பி.,யாக பதவி வகிப்பவர் பிரதாப் சிம்ஹா. இவர், 2014, 2019 ஆகிய இரண்டு தேர்தலிலும் தொடர்ந்து வெற்றி பெற்றார்.மூன்றாவது முறையாக போட்டியிடுவதற்கு, தேசிய, மாநில தலைவர்களின் ஆதரவு திரட்டி வருகின்றார். ஆனால், பார்லிமென்ட் கட்டடத்தில் அத்துமீறி நுழைந்த இளைஞர்களுக்கு பாஸ் வழங்கிய விவகாரத்தால், அவர் மீது கட்சி மேலிடத்துக்கு அதிருப்தி இருப்பதாக கூறப்படுகிறது.மேலும், தன் சொந்த மாவட்டம் என்பதால், இந்த முறை எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்பதில், முதல்வர் சித்தராமையா உறுதியான வியூகம் வகுத்துள்ளார்.எனவே மைசூரு தொகுதியை ம.ஜ.த.,வுக்கு விட்டுக் கொடுத்தால் வெற்றி பெறுவதுநிச்சயம் என்ற தகவலை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்தாராம்.இதற்கு, பா.ஜ., சின்னத்தில் ம.ஜ.த., தலைவரை களமிறக்கினால், அது பற்றி யோசிக்கலாம் என்று அமித் ஷா கூறியதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.இதற்கு, ம.ஜ.த.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சா.ரா.மகேஷ் தான் தகுதியான நபர் என்று குமாரசாமி கணித்துள்ளார். இவரது பெயரை பரிந்துரைப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.இதை அறிந்த பிரதாப் சிம்ஹா, ம.ஜ.த., தலைவர்களையும் சந்தித்து, தனக்கு சீட் வழங்க ஒத்துழைக்கும்படி கேட்பதற்கு திட்டமிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ