உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருப்பதி லட்டு விவகாரம்; மாநில அரசிடம் அறிக்கை கேட்குது மத்திய அரசு

திருப்பதி லட்டு விவகாரம்; மாநில அரசிடம் அறிக்கை கேட்குது மத்திய அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''திருப்பதி லட்டு பிரசாதத்தில் மாட்டு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தில் தற்போதைய நிலை குறித்து அறிக்கை அளிக்கும்படி மாநில அரசிடம் கேட்டுள்ளேன், '' என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது: இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாட்டு கொழுப்பு கலப்பு தொடர்பாக முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் பேசினேன். தற்போதைய நிலை குறித்து அறிக்கை கேட்டுள்ளேன். அறிக்கை ஆய்வு செய்யப்பட்டு தவறு செய்தவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=i9xkmia9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

முதல்வர் ஆலோசனை

இந்த விவகாரம் தொடர்பாக தலைமைச்செயலகத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதற்கு பிறகு, விரிவான தகவல்களுடன் அறிக்கை அளிக்கும்படி தேவஸ்தான அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

தேவஸ்தானம் விளக்கம்

லட்டு சர்ச்சை தொடர்பாக திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் அளித்த பேட்டி: திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் ஷியாமளா ராவ் கூறியதாவது: திருப்பதி லட்டுவின் பிரசாதம் தரம் குறைந்தது குறித்து முதல்வரிடம் புகார் அளித்தோம். லட்டு மற்றும் நெய்யின் தரம் குறித்து பரிசோதனை செய்ய சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார். அதில், அவர் சுமத்திய குற்றச்சாட்டு உண்மை என்பது தெரியவந்தது. அரசு அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் பரிசோதனை செய்ததில் அதிர்ச்சிகரமான முடிவு தெரியவந்தது. விலங்குகளின் கொழுப்பு, மீன் ஆயில் கலந்துள்ளது தெரிந்தது. இதனையடுத்து நெய் சப்ளையர்களை அழைத்து எச்சரித்தோம். நெய்யை ஆய்வு செய்ய எங்களிடம் ஆய்வகம் இல்லை என்பதை பயன்படுத்தி தரமற்ற நெய் விநியோகம் செய்யப்பட்டது. ஏ.ஆர். டைரி புட்ஸ் மாதிரிகளை சோதனை செய்ததில் அவை தரமற்ற நெய்யை அவர்கள் விநியோகம் செய்தது தெரியவந்தது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

வைகுண்டேஸ்வரன்
செப் 20, 2024 19:46

பாலில் இருக்கும் கொழுப்பு மாட்டின் கொழுப்பு தானே??


Kazhaga Kanmani
செப் 21, 2024 04:33

ஹலால் certified Pork பிரியாணி.. ஓகே தானே ??


D.Ambujavalli
செப் 20, 2024 18:38

பக்த கோடிகள் திருப்பதி என்றாலே லட்டு பிரசாதம் என்று வாங்கிச்சென்று உறவு, நட்புகளிடம் பகிர்வதை யாத்திரையின் பலனாக கருதுகையில், இது எத்தனை அதிர்ச்சிகரமான செய்தி


Easwar Kamal
செப் 20, 2024 17:55

ஓவருத்தணும் டேஸ்ட் பிரமாதமா இருக்குனு எஸ்ட்ராவா வாங்கிட்டு போனானுவ. இனிமே லட்டு சொன்ன தலை தெறிக்க ஓட வச்சுட்டானுவளே.


Jysenn
செப் 20, 2024 17:11

மாடு ...


R S BALA
செப் 20, 2024 16:41

அட தேவுடா இதென்ன கொடுமை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறதே பெருமாளே இது வெறும் வதந்திதான் என மாறவேண்டும்..


karthik
செப் 20, 2024 16:35

அந்த ஆர் DAIRY FOODS ஓனர் திமுக அரசால் பழனி அறங்காவல் குழு தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார் என்று தற்போது தெரியவந்துள்ளது.. இவர்கள் கைகள் எங்கு பட்டாலும் அதில் ஊழல் இருக்கு என்று அர்த்தம்


Thirumal Kumaresan
செப் 20, 2024 16:33

செயல் அலுவலர் என்ன அப்படி சொல்கிறார் அவ்வளவு பெரிய நிர்வாகத்தில் சரிபார்க்க கருவிகள் இல்லையா, சரியான செயல் அல்ல


Suresh sridharan
செப் 20, 2024 16:06

திங்கிறவனெல்லாம் கோயில்ல வச்சா இப்படித்தான் நடக்கும்


சமீபத்திய செய்தி