மேலும் செய்திகள்
ரஷ்ய அதிபர் புடினின் இந்திய பயணம்: 10 முக்கிய விஷயங்கள் இதோ!
1 hour(s) ago | 2
கோல்கட்டா: பாபர் மசூதி மீண்டும் கட்டுவேன் என்று அறிவித்த மேற்கு வங்க மாநில திரிணமுல் காங்கிரஸ் எம்எல்ஏ ஹூமாயுன் கபீரை அவரது கட்சி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதியைப் போன்று, மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் பகுதியில் மசூதியை கட்டுவேன் என்று தெப்ரா தொகுதி திரிணமுல் காங்கிரஸ் எம்எல்ஏ ஹூமாயுன் கபீர் அறிவித்திருந்தார். மேலும், இதற்காக டிச.,6ம் தேதி அடிக்கல் நாட்டுவேன் என்றும், 3 மாதங்களுக்குள் கட்டி முடிப்பேன் என்றும் கூறியிருந்தார். அவரது இந்தப் பேச்சு மேற்கு வங்கத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. திரிணமுல் காங்கிரஸ் எம்எல்ஏவின் இந்த அறிவிப்பு சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் என்றும் கவர்னர் சிவி ஆனந்த போஸூம் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து, சர்ச்சைக்குரிய கருத்தை கூறியதாக ஹூமாயுன் கபீரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கோல்கட்டா மேயருமான பிர்ஹாத் ஹக்கீம் கூறியதாவது; 'முர்ஷிதாபாத்தைச் சேர்ந்த எம்எல்ஏக்களில் ஒருவர், பாபர் மசூதி கட்டுவேன் என்று அறிவித்தார். திடீரென பாபர் மசூதியை கட்டுவது ஏன்? அவரை நாங்கள் பலமுறை எச்சரித்தோம். ஆனால், அவர் கேட்கவில்லை. தற்போது அவரை கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்,' எனக் கூறினார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ கபீர், டிச.,22ம் தேதி புதிய கட்சியை தொடங்க இருப்பதாகவும், 2026 சட்டசபைத் தேர்தலில் 135 தொகுதிகளில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
1 hour(s) ago | 2