குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது ரிலீஸ்! இதோ லேட்டஸ்ட் அப்டேட்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பதற்கு டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பிரபாகர் பதிலளித்துள்ளார்.தமிழகம் முழுவதும் வணிகவரித்துறை கூடுதல் அலுவலர், உதவி பதிவாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட 2,327 பணி இடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., முதல் நிலை எழுத்துத்தேர்வு இன்று தொடங்கியது. 2,763 மையங்களில் தேர்வுகள் நடைபெற்றது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zj4kox7w&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சென்னையில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு மையத்துக்குச் சென்று டி.என்.பி.எஸ்.சி., தலைவர் எஸ்.கே. பிரபாகர் பார்வையிட்டார். பின்னர் அவர் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது; நடப்பாண்டில் 10 தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். தற்போது டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் அனைத்தும் திட்டமிட்டவாறு நடைபெற்று வருகின்றன. முடிவுகளை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளோம். தேர்வு நடைமுறைகள் வீடியோ மூலம் பதிவு செய்யப்படுகிறது. சென்னையில் மட்டும் 251 மையங்களில் குரூப் 2, குரூப் 2A நடக்கிறது. தமிழகத்தில் தேர்வு நடைபெறும் அனைத்து மையங்களிலும் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. குரூப் 2 தேர்வு விடைத்தாள் திருத்த 2 மாதங்கள் ஆகும். தேர்வுகள் அமைதியாக நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.