உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏரிகள் ஆக்கிரமிப்பை தடுக்க

ஏரிகள் ஆக்கிரமிப்பை தடுக்க

கோலார்:

அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

''கோலார் மாவட்டத்தில் ஏரிகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்,'' என, அதிகாரிகளுக்கு கலெக்டர் ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.கோலார் மாவட்டத்தில் சிறியதும், பெரியதுமாக மொத்தம் 2,520 ஏரிகள் உள்ளன. இவற்றை பாதுகாக்க வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இது தொடர்பாக, மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆய்வு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், கோலார் கலெக்டர் ரவி பேசியதாவது:கோலார் மாவட்டத்தில் ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடத்தில் ஒப்படைக்க வேண்டும். மீண்டும் ஏரி நிலங்களை யாரேனும் ஆக்கிரமிப்பு செய்தால், அதற்கு அதிகாரிகள் தான் பொறுப்பு. எனவே, அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும்.எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் ஏரிகளை ஆக்கிரமிப்பு செய்ய அனுமதிக்க கூடாது. தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவின்படி, மாவட்ட அளவில் இதற்காக குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து ஏரிகளையும் சர்வே செய்யும் பணியை படிப்படியாக முடிக்க வேண்டும். இதை தாசில்தார்கள் உடனே மேற்கொள்ள வேண்டும்.ஒவ்வொரு மாதமும் இலக்கு நிர்ணயித்து, ஏரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றிய, அதன் விபரங்களை மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும். ஏரிகள் ஆக்கிரமிப்பு குறித்த வழக்குகள் சில உயர் நீதிமன்றத்தில் நிலுவையிலும் உள்ளன. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றிய விபரங்களை நீதிமன்றத்துக்கும் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், மாவட்ட ஜில்லா பஞ்சாயத்து தலைமை அதிகாரி பிரவீன் பி.பாகவாடி, மாவட்ட சட்ட சேவை குழுமத்தின் செயலர் சுனில் ஹொசமணி, துணை கலெக்டர் மங்களா உட்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

அதிகாரிகளுக்கு எச்சரிக்கை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ