உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி சட்டசபை தேர்தல்: ஆட்சியை கைப்பற்றியது பா.ஜ.,

டில்லி சட்டசபை தேர்தல்: ஆட்சியை கைப்பற்றியது பா.ஜ.,

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மாலை 4:30 மணி நிலவரப்படி பா.ஜ., 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 8 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.டில்லியில் 70 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்ரவரி 5ம் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. தேர்தலில் தேசிய அளவில் 'இண்டி' கூட்டணியில் இருந்தாலும், ஆம் ஆத்மியும், காங்கிரசும் தனித்து போட்டியிட்டன. முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ., 68 தொகுதிகளில் போட்டியிட்டது. அதன் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக் தந்திரிக் ஜன சக்தி கட்சிகள் தலா ஒரு தொகுதியில் போட்டியிட்டன. https://www.youtube.com/embed/ZCGB8l4isg0இந்த தேர்தலில், 96 பெண்கள் உட்பட 699 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். மொத்தம் 60.42 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. இந்த ஓட்டுகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் துவங்கி நடந்து வருகிறது.

முன்னிலை நிலவரம்!

தற்போது, மாலை 4:30 மணிப்படி முன்னிலை நிலவரம் பின்வருமாறு; மொத்தம் தொகுதிகள் - 70பா.ஜ.,- 48 ( 40 ல் வெற்றி, 8 ல் முன்னிலை)ஆம் ஆத்மி- 22( 18ல் வெற்றி 4 ல் முன்னிலை)காங்கிரஸ்- 0

கடந்த தேர்தலில்...!

2015ல் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி பெரும் வெற்றியைப் பெற்றது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில், 67ல் வென்றது. 2020 தேர்தலில், 63 தொகுதிகளில் வென்று ஆத் ஆத்மி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.

கெஜ்ரிவால் வாழ்த்து

இது தொடர்பாக கெஜ்ரிவால் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது: மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம். இந்த வெற்றிக்காக பா.ஜ.,வுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன். அவர்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்க்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில் கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் ஏராளமான பணிகளை செய்துள்ளோம். ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக மட்டும் செயல்படாமல், மக்களுடன் இருந்து அவர்களுக்காக பணியாற்றுவோம். இவ்வாறு அந்த வீடியோவில் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 47 )

Dharmavaan
பிப் 08, 2025 16:04

ராகுல்கான் கேஜரி ஆணவப்போட்டி முடிவு


Dharmavaan
பிப் 08, 2025 15:56

டெல்லி மக்கள் புத்தி தமிழ் நாட்டுக்கு வர வேண்டும்


s.sivarajan
பிப் 08, 2025 15:31

தன்னுடைய தோல்வியிலும் காங்கிரஸ் கட்சி ஆம் ஆத்மீ க்கு ஒரு பாடத்தை கற்று கொடுத்துள்ளது


Kannan Chandran
பிப் 08, 2025 15:22

Georges soros -சின் செல்லப்பிள்ளை, BBC -யின் வளர்ப்பு பிள்ளை, communist part of china-வின் கள்ளப்பிள்ளையான ராகுல் இந்த தேர்தலில் அனைத்து இடத்திலும் டெபாசிட் இழந்ததை அவர்களால் சகிக்க முடியாது..


Balasubramanyan
பிப் 08, 2025 15:12

I saw the in the YouTube many youngsters told they are first time voter and it is thrilling experience. They seemed to be educated. How they have voted fo this party which rely on 500rs,biriyani,and quater.what DMK. Will gain rom this. We know their tactics. Delhi people said no to the freebies and corrupt rule. Erode has many educated persons. How the AIADMK and BJP followers voted for using party. EPS is hand in glove with DMK .sad for the educatedand young voters. Your MLA already told he cannot do any thing in one year. He is a business man he will use his position fo his personal gain.he will happily get salary,and other perks. God save Erode people.


pv, முத்தூர்
பிப் 08, 2025 14:50

ராகுல் காங்கிரஸ் கட்சியை கலைத்துவிட்டு, காந்தி ஆஸ்ரமத்தில் சோர்ந்துவிடவும். சோனியா, இட்டாலியில் செட்டில் ஆகிவிடவும்.


Duruvesan
பிப் 08, 2025 14:47

காங்கிரஸ் கட்சியின் கொள்கை,naa jeethega naa jeethne dunga, நானும் ஜெயிக்க மாட்டேன் உன்னையும் ஜெயிக்க உட மாட்டேன். எனது வலுவான சந்தேகம் ராவுள் சார் பிஜேபிக்கு உதவுகிறார், பதிலுக்கு பிஜேபி ராவுள் குடும்பத்தை காப்பாற்றும் எல்லா கேஸ்ல இருந்தும்


Duruvesan
பிப் 08, 2025 14:39

Rahul ji, Kejri ji will say now ED, EC, POLICE, EVM, VOTER LIST, COURT, ADANI all worked for BJP.


தமிழ் மைந்தன்
பிப் 08, 2025 14:37

உங்களால் கொத்தடிமைக்கு பதில் சொல்ல இயலாது்


T.sthivinayagam
பிப் 08, 2025 14:30

நாட்டுக்கு மோடி ஜியும் தமிழ் நாட்டுக்கு ஸ்டாலின் ஐயாவும் தேவை என்பதை உணர்ந்து வாக்களித்து உள்ளனர் என்று மக்கள் கூறுகிறார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை