உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை தொடரும்; சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை தொடரும்; சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும். சென்னையில் இன்று(ஜன.,08) ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும்' என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.மேலும் அவர் கூறியதாவது: அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை, தஞ்சை, கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். அதேபோல், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குமரிக்கடலை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. வடகிழக்கு பருவமழை தொடர்ந்து தீவிரமாகவே உள்ளது.புதுச்சேரியில் ஜனவரியில் இதுவரை இல்லாத அளவு மழை பதிவாகியுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 23 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

KRISHNAN R
ஜன 08, 2024 20:00

பிரதர்,, வானிலை மையம் அவர்களே,, ஒரு காலத்தில்,,,மித்மானது முதல் கனமழை அல்லது,,,மேகமூட்டம்... என்று கூறி,, உங்களை... கிண்டல் செய்த காலம் போய் விட்டது... இனி...தெளிவாக.... கிளைமேட் மாற்றங்களால்... கன மழை வரலாம் என்று போட் டு.. விடுங்கள்....


duruvasar
ஜன 08, 2024 14:31

தற்சமயம் எவளவு சதவிகிதம் வேலை முடிந்திருக்கிறது


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை