உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 16 மணி நேர போராட்டத்துக்கு வெற்றி: ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை பத்திரமாக மீட்பு

16 மணி நேர போராட்டத்துக்கு வெற்றி: ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை பத்திரமாக மீட்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் தவுசா அருகே ஜோத்புரியாவில் 20 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த இரண்டரை வயது பெண் குழந்தை, 16 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டது.ராஜஸ்தானின் தவுசா மாவட்டம் ஜோத்புரியாவில் பாண்டூகி என்ற இடத்தில், நேற்று மாலை 6 மணியளவில் இரண்டரை வயது பெண் குழந்தை விளையாடி கொண்டிருந்தது. பெற்றோர் குழந்தை விளையாடி கொண்டிருக்கிறது என்ற எண்ணத்தில் அஜாக்கிரதையாக இருந்துள்ளனர். சிறிது நேரம் கழித்து, குழந்தையை காணவில்லை என்பதை அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அருகில் ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிறிது நேரம் போராடியும் எடுக்க முடியாமல் போன நிலையில், போலீசார், தீயணைப்பு படையினரை நாடினர்.இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நவீன கருவிகள் உதவியுடன் ஆழ்துளை கிணறு அருகே பள்ளம் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.தொடர்ந்து 16 மணி நேரமாக மேற்கொண்ட முயற்சியின் பலனாக, இன்று (செப்., 19) காலை 11 மணிக்கு குழந்தையை பத்திரமாக மீட்டனர். குழந்தையை மீட்டதும் பெற்றோர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்; மீட்பு படையினருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. குழந்தை உயிருடன் மீட்கப்பட்டதை அறிந்ததும், ஒட்டு மொத்த கிராமத்தினரும் சேர்ந்து மீட்பு படையினருக்கு பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

aaruthirumalai
செப் 19, 2024 14:45

பொருப்பற்ற பெற்றோருக்கு தண்டனை வழங்க வேண்டும்.


Kumar Kumzi
செப் 19, 2024 12:45

அரசாங்கம் இப்படியான பெற்றோரிடமிருந்து குழந்தையை பறித்து குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில் வளர்க்க வேண்டும்


பாமரன்
செப் 19, 2024 12:42

இதில் வெற்றியை கொண்டாட எதுவுமில்லை... அஜாக்கிரதையாக இருந்த அந்த துளையிட்ட நிறுவனத்தை கடுமையா தண்டிக்கணும்... இந்த மாதிரி நியூஸெல்லாம் வர்ற வரை நாம முன்னேறிட்டோம்னு சொல்றதுல எந்த அர்த்தமும் இல்லை...


Barakat Ali
செப் 19, 2024 12:42

வருடம் இது போல மூன்று சம்பவங்கள் சராசரியாக நடக்கின்றன .... .


கத்தரிக்காய் வியாபாரி
செப் 19, 2024 12:41

அதேபோல் ஆழ்குழாய் பதிக்கும் கம்பனியின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும்


Sudha
செப் 19, 2024 12:34

ஆழ்துளை கிணற்றுக்கு ஒரு அமைச்சர் நியமன seiyalaam


Lion Drsekar
செப் 19, 2024 12:24

பெற்றோரையும் கிணற்றை திறந்து வைத்தவர்களுக்கும் சிறந்த குடிமகன் விருது வழங்கி பொற்கிழி கொடுக்கலாம், அரசு இவ்வளவு தொகை செலவு செய்ததே அதை அவர்ளிடத்தில் இருந்து வாங்கவேண்டும், வந்தே மாதரம்


சூரியா
செப் 19, 2024 12:04

இப்படித் தவறி விழும் குழந்தைகளின் பெற்றோர்களைச் சிறையில் அடைக்க வேண்டும்.


ko ra
செப் 19, 2024 11:45

நல்ல செய்தி. ஆனால் இப்படி கவனக்குறைவாக இருந்த பெற்றோருக்கும் ஆழ் துளை கிணறு போட்ட ஒப்பந்த தாரருக்கும் ஒரு தண்டனை தர வேண்டும். There must be an accountability policy in national level.


புதிய வீடியோ