உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாளை ஒத்திகை: பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்

நாளை ஒத்திகை: பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்

புதுடில்லி :இந்தியா - பாகிஸ்தான் இடையே எந்த நிமிடமும் போர் வெடிக்கலாம் என்ற நிலையில், நாடு முழுதும் நாளை போர் ஒத்திகை நடத்தும்படி, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஏப்., 22ல் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முப்படை அதிகாரிகளுடன், பிரதமர் மோடியும் தினசரி ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று, ராணுவ செயலர் ராஜேஷ் குமார் சிங்கை அழைத்து பேசினார். ராணுவத்தின் உத்தேச தாக்குதல் திட்டம் குறித்து பிரதமரிடம் அவர் விளக்கினார்.இந்த நிலையில், நாடு முழுதும் நாளை போர் ஒத்திகை நடத்தும்படி, அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அவசர உத்தரவு பிறப்பித்தது. போர் நடக்கும்போது பொது மக்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்று பயிற்சி அளிப்பதே போர் ஒத்திகை. இது போன்ற பயிற்சி, 1971ல் நடந்த இந்தியா - பாக்., போரின்போது கடைசியாக நடத்தப்பட்டது.

உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவு:

*வான்வழி தாக்குதல் எச்சரிக்கை சைரன் ஒலிக்க விடுதல்: எதிரி விமானங்கள் குண்டு வீச வருவதை எச்சரிக்கும் சைரன் ஒலி கேட்டதும், பொதுமக்கள் தாங்கள் செய்துகொண்டிருக்கும் எல்லா வேலையையும் விட்டுவிட்டு, உயிரை பாதுகாத்து கொள்ள ஓடி ஒளிய வேண்டும். சாலைகள், வீதிகளில் இருந்தால் சட்டென கீழே படுக்க வேண்டும். இந்த சைரன்கள் ஒழுங்காக வேலை செய்கிறதா என்பதை மாநில அரசுகள் முதலில் சோதிக்க வேண்டும். * தாக்குதல் நடத்தப்பட்டால் பாதுகாத்து கொள்வது குறித்து, பொது மக்கள், மாணவர்களுக்கு பயிற்சி: தற்போதைய தலைமுறையினர் போரை பார்த்தது இல்லை என்பதால், இது மிகவும் முக்கியமானது. எதிரி விமானங்கள் அல்லது ஏவுகணைகள் வருவது தெரிந்ததும், மின்சாரம் துண்டிக்கப்படும். குறிப்பாக தெரு விளக்குகள் அணைக்கப்படும். வீடுகளில் மின் விளக்குகள் எரிந்தால், அது வெளியே தெரியாமல் இருக்க கதவு, ஜன்னல்களை மூட வேண்டும். கண்ணாடி ஜன்னலாக இருந்தால் கருப்பு தாள் அல்லது துணியால் மறைக்க வேண்டும். மின் விளக்குகளை அப்போது அணைத்து விடுவது உத்தமம். * விபத்து தடுப்பு நடவடிக்கைகள்: திடீர் அலெர்ட் வந்தால், உடனே வீட்டுக்கு போய் குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தான் எல்லோருக்கும் வரும். அதனால் ஏற்படும் அவசரத்தில், வாகனங்கள் மோதி விபத்து நேர்வது சகஜம். அப்போது என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது என்பதற்கான பயிற்சி இது. நகரங்கள் மற்றும் கிராமங்களில் ஏற்படும் பாதிப்புகள் வெவ்வேறு விதமாக இருக்கும் என்பதால், அதற்கேற்ப பயிற்சி வழங்க வேண்டும். * முக்கிய ஆலைகள், ஆயுத கிடங்குகளை முன்கூட்டியே மறைப்பதற்கான ஏற்பாடு: போரில் எதிரிகள் வைக்கும் முதல் குறி, எதிரியின் ஆயுத தளங்களாக இருக்கும். அடுத்தது, மின் உற்பத்தி நிலையம், டெலிவிஷன் ஸ்டேஷன், டெலிபோன் எக்சேஞ்ச் போன்ற இடங்களாக இருக்கும். இவை எந்த இடத்தில் உள்ளன என்பதை எதிரிகள் ஏற்கனவே அறிந்திருப்பர். ஆனால், குண்டு வீசும் விமானங்களோ, ஏவுகணைகளோ வரும்போது, அவர்கள் அறிந்திருந்த இடத்தில் இந்த நிலையங்கள் இல்லை என்ற தோற்றத்தை உருவாக்கி குழப்புவதற்காக, அந்த ஆலைகள் அல்லது அமைப்புகளை காடு, மரங்கள், செடி, கொடி போன்ற துணி அல்லது தார்பாய்கள் போர்த்தி மறைக்க வேண்டும். * மீட்பு பணி பயிற்சி : என்ன தான் உஷாராக இருந்தாலும், அதையெல்லாம் மீறி சில இடங்கள் நேரடியாக தாக்கப்பட்டு, பொதுமக்கள் காயம் அடைய வாய்ப்புகள் அதிகம். அந்த நேரத்தில், அந்த இடங்களில் இருந்து, இறந்தவர்களையும் காயம் அடைந்தவர்களையும் காலதாமதம் இல்லாமல் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வது எப்படி என்பதற்கான பயிற்சி இது.

மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின் முழு ஆதரவு

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன், பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் பேசினார். அப்போது, பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்த ரஷ்ய அதிபர் புடின், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு முழு ஆதரவு அளிப்பதாக பிரதமர் மோடியிடம் உறுதி அளித்தார். காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியோரை சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். ரஷ்யாவின், 80வது வெற்றி தின கொண்டாட்டத்துக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, இந்தாண்டு இறுதியில் நம் நாட்டில் நடக்கும் இந்தியா - ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்க வரும்படி, ரஷ்ய அதிபர் புடினுக்கு அழைப்பு விடுத்தார். மேலும், இரு தலைவர்களும் இரு தரப்பு உறவுகள் குறித்தும் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 53 )

Kulandai kannan
மே 06, 2025 16:49

அமைதி வெறியர்களால் எவ்வளவு தொல்லை!!


பாமரன்
மே 06, 2025 15:54

போர் ஒத்திகை ஆரம்பத்தில் நாட்டின் எல்லையை வலுப்படுத்தும் விதமாக படைகள் தடவாளங்கள் குவிப்பது தான் முதல் உத்தி... அப்படி எதுவும் நடந்ததா தெர்ல... பார்க்கப்போனால் முந்தாநாள் ஒரு பாக்கி பக்காவான ஐடி கார்டு எடுத்துட்டு எல்லை தாண்டி வாக் இன் செஞ்சதா நியூஸ்... தேர்தல் நேரத்தில் டெய்லி நாலு பேர் வந்து ஜி கிட்ட மீட்டிங் போடுறதுக்கு பதில் எல்லையில் போயி பாதுகாப்பு ஏற்பாடுகளை செஞ்சா ஜி பிஹார் போய் இங்கிலிபீஸ்ல வார்னிங் மெஸேஜை டெலிப்ராம்ப்டர் பார்த்து படிக்க வசதியாக இருக்கும். தென் மாநிலங்களில் என்ன போர் ஒத்திகை செய்யப்போறாய்ங்களோ தெர்ல... நாளைக்கு சப்போட்டா எல்லாரும் ஆபீஸ்க்கு லீவ் போடுன்னு சொன்னால் இங்கு உலாவும் காக்காய்ங்க கூட காணாமல் போகும்... பார்ப்போம்


vivek
மே 06, 2025 22:22

கேடுகெட்ட தறுதலை பாமரன் என்பதை நிரூபித்து கொண்டே இருகிறாய்


Vr Gopi
மே 06, 2025 13:58

என்ன பயமுறுத்துறீங்க.. ஆரம்பமே பீதியை கிளப்புது, கொரோனா வந்தப்ப கூட உயிர் பயம் இல்ல.


R.PERUMALRAJA
மே 06, 2025 10:48

நம் நாட்டு BSF வீரர் தவறுதலாக எல்லையை தாண்டி பாகிஸ்தான் சென்று விடுகிறார் என்றால் தீவிரவாதிகளும் எல்லையை தாண்டி நம் பக்கம் ஊடுருவ வாய்ப்புக்கள் அதிகம் கொடுக்கப்படுகிறது என்றே பொருள். வேலியை ஒழுங்காக பராமரிக்காதது யார் தவறு ? பாகிஸ்தான் மக்களும் அவர்களின் சிந்தனைகளும் "குப்பை கிடங்கு" , பாகிஸ்தானியர்களுக்குள் ஒருவரை ஒருவர் அடித்து கொண்டு மாண்டு கொள்ளும் நேரம் வந்துவிட்டது என்பதை உணர்ந்து மற்றும் நீண்ட நாட்களாக ஆயுதம் ஏந்தி போராடும் பாகிஸ்தானின் பலூச் பகுதி, விடுதலை பெற்று பாகிஸ்தானிடம் இருந்து பிரிவதை தடுக்கவும், சீனா, தனது உளவு அமைப்புக்களை கொண்டு அறிந்து, பின் சீன பாகிஸ்தான் ராணுவத்திடம், இந்திய மீது தீவிரவாத தாக்குதல்களை நடத்தினால், பதிலுக்கு இந்தியாவும் தாக்குதல் நடத்த தயாராகும், இவாறு நடந்தால் பாகிஸ்தானில் மீண்டும் இன உணர்வு, நாட்டு நலம் என்று சித்தாந்தத்தை பாகிஸ்தானியர்கள் உணர்வார்கள் மறுபடியும் ஒன்று இணைவார்கள் என்று கூறியதனாலேயே இந்த தாக்குதல் நடைபெற்று இருக்கிறது, உமர் அப்துல்லா தனது இருப்பிடத்தை தக்கவைத்துக்கொள்ளவும் இது போல துப்பாக்கி சூடுகள் நடை பெற அனுமதிப்பார் என்பதையும் மோடி மறக்கமாட்டார் .


vetrivel iyengaar
மே 06, 2025 10:45

அஸ்ஸாம் .. மிஜோரம் ....நாகலாந்து ....சிக்கிம் .... திரிபுரா ....அருணாச்சலப்பிரதேசம் ....மேகாலயா ......மணிப்பூர் ......இங்கெல்லாம் கூட போர் ஒத்திகை செய்வார்களா ??? இந்த மாநில அரசுகளை எல்லாம் கலைத்துவிட்டு போர் ஒத்திகை செய்வார்களா ???? சும்மா கேட்டேன்


Sudha
மே 06, 2025 12:24

இந்த மாநிலங்களை கெடுத்த வர ராகுல் காந்தி எனும் காந்தியவாதியின் முன்னோர்கள். கேட்கவேண்டியது அவர்களிடம். இந்த ஊர்கள் எங்கே இருக்குன்னு தெரியுமா?


vivek
மே 06, 2025 15:58

உனக்கு நல்ல அறிவு இருந்தா கேட்க மாட்டாய்....


vetrivel iyengaar
மே 06, 2025 10:41

மணிப்பூரில் கூட போர் ஒத்திகை நடத்துவார்களா? அங்கு தான் தினமும் நடக்குதே புதுசா இன்னொன்னா ??


Sudha
மே 06, 2025 12:16

இந்தியர்களுக்கு இந்த எச்சரிக்கை எட்டப்பர்கள் அல்ல


R.PERUMALRAJA
மே 06, 2025 10:35

அண்ணா அறிவாலயமும் பாகிஸ்தானும் அதிர்ந்து போகும் வார்த்தை போர் ஒத்திகை எங்கே போர் வந்து மக்கள் பா ஜ க வை ஆதரித்து விடுவார்களோ என்ற பயத்தில் முதல்வர் எல்லோரையும் சென்னையை விட்டு விரட்டிவிட்டார் தேர்தல் வேலையை ஆரம்பிக்க


vetrivel iyengaar
மே 06, 2025 10:52

தமிழக மக்கள் தெளிவானவர்கள்.. நாட்டு நலன் என்று வரும்போது முன்னிற்பார்கள் அவர்களால் ஆன அனைத்து ஒத்துழைப்பையும் நல்குவார்கள். தேர்தல் என்று வரும்போது உஷாராகிவிடுவார்கள் நாட்டு நலனுக்கு எவ்வாறு குந்தகம் விளைந்தது. எங்கு தவறு நடந்தது.. யார் கோட்டை விட்டார்கள் என்று தீர்க்கமாக யோசிப்பார்கள். இங்காவது அமைச்சர்களை தேர்தல் வேலை செய்யுமாறு பணித்துள்ளார்.


ramesh
மே 06, 2025 10:13

இந்த போர் ஒத்திகை சிவாஜி கணேசன் நடித்த தங்கப்பதக்கம் படத்திலும் கிளைமாக்ஸ் காட்சியிலும் இடம் பெற்று இருக்கும்


ramesh
மே 06, 2025 10:10

இதே போன்ற போர்கால ஒத்திகை 1971 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் போர் நடந்த்த பொது நாடு முழுவது நடந்தது . அந்த நேரத்தில் நாங்கள் நாகர்கோவிலில் குடி இருந்தோம் . அரசு அறிவிப்பின் படி இரவு 9 மணிக்கு செய்றேன் ஒழிக்க பட்டது . அதை தொடர்ந்து அணைத்து வீடுகளிலும் விளக்குகள் அணைக்க பட்டது . பிறகு 9.05 மணிக்கு மீண்டும் சைரன் ஓதப்பட்டது . அனைத்து வீடுகளிலும் மீண்டும் விளக்குகள் போடா பட்டது . இது நடக்கும் போது எனக்கு 9 வயது . எனக்கு நடந்தது இன்றுவரையிலும் ஞாபகம் நன்றாக இருக்கிறது . போர்நடந்த போது எங்கள் வீட்டில் தினமலர் பத்திரிக்கை தான் வந்து கொண்டு இருந்தது . அப்போது தினமும் காலையில் போர் நடந்த செய்திகளை ஆர்வத்துடன் படித்தது இன்னும் நன்றாக நினைவு இருக்கிறது .


vivek
மே 06, 2025 16:00

ஆளும் வளரனும்....அறிவும் வளரனும் ரமேஷ்....உனக்கு ஒண்ணுதான் வளர்ந்திட்கு


ramesh
மே 06, 2025 21:05

எனக்கு தேவை இல்லை விவேக்


ramesh
மே 06, 2025 21:07

இரண்டும் வளர்ந்த பிறகு போடு


Pats, Kongunadu, Bharat, Hindustan
மே 06, 2025 10:08

மறக்காம இன்னக்கே சரக்கு வாங்கி வெச்சுடனும். நாளைக்கி இருப்போமா இல்லையோ. நைட்டு சரக்கடிச்சு படுத்தா போர் நடந்தாக்கூட நமக்கொண்ணுந் தெரியாது. பாகிஸ்தான் காரன் வந்து பாத்தாலும் செத்துட்டான்னு போயிடுவான். நாம பொழச்சுக்கலாம். அப்பா... அடுத்த வாரம் டாஸ்மாக் தொரங்துடுவீங்கள்ள? அப்பான்னா அப்பாதான்.


புதிய வீடியோ