உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாதி அல்தாப் லல்லி சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி

காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாதி அல்தாப் லல்லி சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் முன்னணி தளபதி அல்தாப் லல்லி சுட்டுக்கொலை செய்யப்பட்டான்.ஜம்மு- காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது பந்திபோராவில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் வந்தது.அப்பகுதியில் காஷ்மீர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் முன்னணி தளபதி அல்தாப் லல்லி சுட்டுக்கொலை செய்யப்பட்டான். இதற்கிடையே, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகப்படும், காஷ்மீரை சேர்ந்த பயங்கரவாதிகள் அடில் மற்றும் ஆசிப்பின் வீடுகளை இந்திய ராணுவம் வெடி வைத்து தகர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

rksethuram
ஏப் 25, 2025 16:41

நம் நாட்டின் மீது பல தாக்குதல்கள் அவ்வப்போது நடந்துக் கொண்டிருக்கிறது. ஒரு தீவிரவாதியை ஒழித்தால் போதாது. பலரை உருவாக்கிக் கொண்டேயிருக்கும் எபிசென்டெரை கருவை அழிக்க வேண்டும். ஜெய் ஹிந்த்


Mr Krish Tamilnadu
ஏப் 25, 2025 14:08

அமரன் பட அல்தாப், பந்திபோரா? காரணம் துடைத்து எறிய காரணம். காஷ்மீரில் முஸ்லிமை தவிர யாரும் காலை வைக்காதே? என்ன ஒரு வெறி? ஆசியாவின் அழகிய பூமி அவர்களுக்கு மட்டுமே என்ற ஆசை. எதை பற்றியும் சிந்திக்காத மதம் இனவெறி . ரத்தம் குடித்து பழகிய ஓநாய்களை அசோக சக்கரம் அணிந்த சிங்கங்கள் வேட்டையாடட்டும். காஷ்மீரில் இந்திய பிரஜையாக வாழ மட்டுமே அனுமதி, முஸ்லிம் என்ற மத வெறியார்களாக அல்ல.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 25, 2025 13:22

எண்ணிக்கை அதிகமானால் மூர்க்கர்கள் மீண்டும் தனிநாடு கேட்பார்கள்.. ஷரியத் அமல்படுத்த சொல்வார்கள். மதத்தைக் கேட்டுவிட்டு ஹிந்துக்களை மட்டும் சுட்டுக்கொன்றுள்ளனர்.


பேசும் தமிழன்
ஏப் 25, 2025 13:20

வீட்டை ஏன் இடிந்தீர்கள் என்று இதற்க்கும் முட்டு கொடுக்க உச்ச நீதிமன்றம் வரும் பாருங்கள்.. உண்மையை சொல்ல வேண்டும் என்றால்..... இது போன்ற நீதிமன்றங்களின் நடவடிக்கை தான்.. தீவிரவாதிகளை குற்றம் செய்ய தூண்டுகிறது.


Barakat Ali
ஏப் 25, 2025 13:18

என்னது???? லஷ்கர் இ தொய்பா தளபதி கொல்லப்பட்டானா ???? குண்டு வெடிப்பை சிலிண்டர் வெடிப்பு என்று பொய்சொன்ன தளபதி ????


karthik
ஏப் 25, 2025 13:05

வீரர்களே தயவு செய்து இந்த பயங்கரவாதிகளை அவ்ளோ எளிதாக சுட்டு கொள்ளாதீர்கள்...அவன் தலையே வெட்டி எரியுங்க.


Velan Iyengaar
ஏப் 25, 2025 12:44

இதை முன்னாடி ஏன் செய்யவில்லை என்ற கேள்வி எல்லோருக்கும் வருமா வராதா?? தாக்குதல் நாடாகும் முன்னாடி தூங்கிக் கொண்டிருந்தனரா? அப்போ மொத்த பாதுகாப்பு அமைப்புகளும் தூங்கிக்கொண்டு தான் கோட்டைவிட்டனரா ???


Mettai* Tamil
ஏப் 25, 2025 13:06

உங்களைப்போன்ற ஸ்லீப்பர் செல்களை அடையாளம் காண்பது ரொம்ப கஷ்டம் ...


KavikumarRam
ஏப் 25, 2025 13:14

உன்னை போன்ற கூட்டம் இருக்கும் வரை பாரதம் இந்தமாதிரி இழப்புகளை சந்தித்தே தீரும்.


பேசும் தமிழன்
ஏப் 25, 2025 13:22

உன்னை போன்ற தீவிரவாத செயலுக்கு முட்டு கொடுக்கும் ஆட்கள் இருக்கும் வரை.... தீவிரவாதிகளுக்கு கொண்டாட்டம் தான்.


srini
ஏப் 25, 2025 13:54

better you go to Pakistan


Raman
ஏப் 25, 2025 14:22

Whats your name, true name.. Anti-national.


Bhakt
ஏப் 25, 2025 15:29

தினமலர் இவனோட தகல்வல்களை NIA விடம் பகிருங்கள். வந்து வாயில சுடட்டும்.


ஈசன்
ஏப் 25, 2025 12:43

இந்த தீவிரவாதிகளை தூக்குவது நல்ல விஷயமே. எப்போது லாஷ்கர் இயக்கத்தின் கமண்டர்களை கொல்ல போகிறீர்கள். முக்கியமாக ஹபீஸ் சையத் ?


சமீபத்திய செய்தி