உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேமராக்கள் முன் அரசியல் அமைப்பு சட்டத்தை தொடும் பாசாங்கு; ராகுல் விமர்சனம்

கேமராக்கள் முன் அரசியல் அமைப்பு சட்டத்தை தொடும் பாசாங்கு; ராகுல் விமர்சனம்

புதுடில்லி: 'உங்கள் சொந்த அரசுகள், அரசியலமைப்புச் சட்டத்தை துண்டு துண்டாக கிழிக்கும்போது, கேமராக்களின் முன்பாக அதை தொடுவதெல்லாம் வெறும் பாசாங்குத்தனமே' என்று லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறினார்.அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: பா.ஜ., ஆளும் மாநிலங்களில் அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் மீறுகிறார்கள். தற்போது சுல்தான்பூரில் நடந்த மங்கேஷ் யாதவ் என்கவுன்டர், பா.ஜ.,வுக்கு சட்டத்தின் ஆட்சி மீது நம்பிக்கை இல்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. அவரது குடும்பத்தின் கண்ணீர் கேட்கிறது. யார் வாழ வேண்டும், யார் வாழ மாட்டார்கள் என்பதை நீதிமன்றமோ அல்லது போலீசாரோ தீர்மானிக்குமா?

பாரபட்சமின்றி விசாரணை

எஸ்.டி.எப்., போன்ற நிபுணத்துவப் படைகள் பா.ஜ., அரசின் கீழ் கிரிமினல் கும்பல் போல் நடத்தப்படுகின்றன. இது குறித்து மத்திய அரசு மவுனம் சாதிப்பதுதான். அதிகாரிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்களை யார் காப்பாற்றுகிறார்கள், ஏன்? அரசியலமைப்பு சட்டத்தை கேமராக்களுக்கு முன்னால் காட்டுவது வெறும் பாசாங்குத்தனம். உத்தரபிரதேசத்தில் நடந்த அனைத்து சந்தேகத்திற்கிடமான என்கவுன்டர்களையும் பாரபட்சமின்றி விசாரித்து நீதி வழங்க வேண்டும். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

C.SRIRAM
செப் 09, 2024 18:12

நீ என்ன உத்தம புத்திரனா ?. அந்த புத்தகத்தில் எத்தனை பக்கம் மற்றும் பிரிவுகள் என்று கேட்கப்பட்டபோது செவிடன் மாதிரி தானே உட்கர்ந்த கட்சி உங்களுடையது


என்றும் இந்தியன்
செப் 08, 2024 18:25

இந்த ராவுல் வின்சி இத்தாலியன் என்னும் ராகுல் காந்தியின் உளறல்கள். ஏதோ ஒன்றை சொல்லவேண்டும் என்று சொல்வதே இவருக்கு காலையிலிருந்து இரவு வரை வேலை, அவரிடம் பணம் வாங்கியாதால் அதை மீடியா சொல்லவேண்டும் என்று அவர்கள் கடமை, பணம் பணம் பணம் கொடு என்ன வேண்டுமானாலும் ரெடி ஜாதி இப்போது மீடியா ஆகிவிட்டது உபிஸ் ரூ 500, சாப்பாடு, சரக்கு கூட்டம் அதிகமாகிவிட்டதால் இன்னும் அது பெரிதாகத்தெரிகின்றது


kulandai kannan
செப் 08, 2024 18:02

Same side goal


குமரன்
செப் 08, 2024 17:55

இந்த பாசாங்கு செய்வதே ராகுல் என்பது மக்களுக்கு நீண்ட நாட்களாக தெரியும்


KRISHNAN R
செப் 08, 2024 14:08

சேராத இடம்தண்ணில் சேர வேண்டாம்.. அவ்வை மொழி


M Ramachandran
செப் 08, 2024 13:37

நாட்டு பாற்றற்ற வேறு நாட்டு விஸ்வாசிகள் அதிகம் புரப்பட்டு விட்டனர். கைய்ய காலை ஆட்டி பொய் மூட்டைய் களை பொது வெளியில் அவுத்து கொட்டி நாரடித்து கொண்டிருக்கின்றன


nagendhiran
செப் 08, 2024 13:00

யோக்கியன்... சொம்பு வக்காளத்து வாங்குதுங்க?


Nandakumar Naidu.
செப் 08, 2024 12:21

அரசியலமைப்பைப்பற்றி பேச இந்த தேச, சமூக மற்றும் ஹிந்து விரோதிக்கு அறுகதையே இல்லை. இவனும் இவன் குடும்பமும் நம் நாட்டின் சாபக்கேடுகள். அழிக்கப்பட வேண்டிய தீய சக்திகள்.


Kumar Kumzi
செப் 08, 2024 12:14

இவனுக்கு இந்தியா எதிர்ப்பு விஷம் நன்றாகவே முற்றிவிட்டது இவனை உடனடியாக நாடு கடத்துங்கள்


Anonymous
செப் 08, 2024 11:59

உங்க பாட்டி திருமதி .இந்திரா காந்தி அம்மையார் ஆட்சியில் எமர்ஜென்சி கொண்டு வரப்பட்டு, மனித உரிமை மீறல் வரம்பே இல்லாமல் போனது பாவம் உங்களுக்கு தெரியாது போலும், உங்க சித்தப்பா சஞ்சய் காந்தி , திருமணம் ஆகாத எத்தனையோ இளைஞர்களுக்கு கருத்தடை ஆபரேசன் செய்து , எத்தனை குடும்பங்கள் நிம்மதி இழக்க செய்தார் என்பதும் உங்களுக்கு தெரியாது, உங்களுக்கு தெரிந்தது எல்லாம் இன்றைய பா.ஜா.க அரசினை என்ன குற்றம் சொல்லலாம், எப்படி குடைச்சல் குடுக்கலாம் என்பது மட்டும் தான், முடியலனா பேசாம அரசியல விட்டு நாகரீகமாக விலகி விடுங்கள், நம் நாட்டு மக்கள் நிம்மதியாக இருப்பார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை