உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழகத்திற்கு சுற்றுலா தொகுப்பு திட்டம்; கேரளா போக்குவரத்து கழகம் ஏற்பாடு

தமிழகத்திற்கு சுற்றுலா தொகுப்பு திட்டம்; கேரளா போக்குவரத்து கழகம் ஏற்பாடு

பாலக்காடு; தமிழகத்திற்கு குறைந்த கட்டணத்தில், சுற்றுலாத் தொகுப்பு திட்டத்தை கேரளா போக்குவரத்து கழகம் துவக்கியுள்ளது.இது குறித்து, கேரளா போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பு:தமிழகத்தில், மகாபலிபுரம், தஞ்சாவூர், மதுரை, சென்னை, வேளாங்கண்ணி ஆகிய ஐந்து சுற்றுலா பகுதிகள் மையமாகக் கொண்டு, இரண்டு, மூன்று நாட்கள் கொண்ட சுற்றுலா பயணம் தொகுக்கப்பட்டுள்ளது.பயணியரின் விருப்பத்திற்கு ஏற்ப, பயண மத்தியில் மற்ற சுற்றுலா தளங்களிலும் பார்வையிட வசதி செய்யப்படுகிறது. மாநிலத்தில் உள்ள, 93 பஸ் ஸ்டாண்ட்கள் வாயிலாக இந்த சுற்றுலா தொகுப்பு செயல்படுத்தப்படும்.இதற்காக ஏ.சி., இல்லாத 'சூப்பர் டீலக்ஸ்' பஸ்கள் பயன்படுத்தப்படும். ஒரு பயணம், 40 பேர் கொண்டதாகும். இத்தனை பேர், ஒரு பஸ் ஸ்டாண்டில் ஏறவில்லை எனில், மற்ற பஸ் ஸ்டாண்டிலிருந்து உள்ள பயணியரை இணைக்கலாம்.இது தொடர்பான கூடுதல் தகவல்களை, பஸ் ஸ்டாண்டுகள் மற்றும் மாவட்ட 'பட்ஜெட் டூரிசம்' பிரிவில் இருந்து அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை