மேலும் செய்திகள்
மயங்கி விழுந்து சுற்றுலாப் பயணி பலி
28-Apr-2025
மூணாறு:ஈரோடை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மனைவி உமா மகேஸ்வரி, 38, உட்பட, 28 பேர் குழுவினர் மூணாறுக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள், மூணாறு பள்ளிவாசல் எஸ்டேட் பகுதியில் தனியார் விடுதியில் தங்கினர்.அங்கு நேற்று முன்தினம் இரவு, 'பயர் கேம்ப்' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பங்கேற்றவர்கள், ஆடிப் பாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது, உமா மகேஸ்வரி திடீரென மயங்கி விழுந்தார்.அவரை மூணாறு டாடா மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், உடல்நலக்குறைவால் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்.
28-Apr-2025