உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யமுனை நதியில் நச்சு? கெஜ்ரிவாலுக்கு சிக்கல்!

யமுனை நதியில் நச்சு? கெஜ்ரிவாலுக்கு சிக்கல்!

புதுடில்லி : யமுனை நதியில், ஹரியானா மாநில பா.ஜ., அரசு நச்சு கலப்பதாக குற்றஞ்சாட்டிய விவகாரம் தொடர்பாக, டில்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவாலுக்கு விளக்கம் கேட்டு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.யமுனை நதியில், ஹரியானா மாநில பா.ஜ., அரசு நச்சு கலப்பதாக, கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டி இருந்தார். இதுகுறித்து அவர் மீது பா.ஜ., தேர்தல் கமிஷனில் புகார் அளித்தது. இதற்கு, உரிய ஆதாரங்களுடன் தன் பதிலை அளிக்குமாறு தேர்தல் கமிஷன் கெஜ்ரிவாலுக்கு உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் கமிஷன் அனுப்பிய நோட்டீஸ் விபரம்:

இத்தகைய குற்றச்சாட்டுகள் அண்டை மாநிலங்களில் வசிப்போருக்கு இடையே பகைமையை உருவாக்கும். சட்டம் - ஒழுங்கு அச்சுறுத்தல் ஏற்படக் காரணமாக அமையும். எனவே, புகாருக்கு உண்டான ஆதாரங்களுடன், இன்றிரவு 8:00 மணிக்குள் தன் பதிலை கெஜ்ரிவால் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

sankaranarayanan
ஜன 29, 2025 12:59

நீதி மன்றம் இவரை சும்மா நச்சுன்னு போட்டு ஒக்காத்தி வைகோனோம் டில்லியை இவர் நச்சு செய்தார் யமுனையை நச்சு செய்தார் பிறகு அரசியலையே இவர் நச்சு செயத்துவிட்டார் இருக்கு நச்சு கேஜரிவால் என்றபட்டம்கூட கொடுக்கலாமே


Sridhar
ஜன 29, 2025 12:35

அம்மோனியா அது இது என்று பிதற்றி விசயத்தை மழுங்கடிக்க முயலுவான். நேரம் தாழ்த்தாமல் உடனே FIR பதிவு செய்து வாக்குப்பதிவு முடிந்தவுடன் கைது செய்யவேண்டும். ஏற்கனவே கைது செய்யப்பட்டு பெயிலில் இருக்கிறவன் சட்டவிரோதமாக இருசாராருக்கிடையே மோதலை வளர்க்கும் வண்ணம் பேசியது மன்னிக்க முடியாத பெரும் குற்றம்.


Mohan
ஜன 29, 2025 11:21

கெஜ்ரி சார் நீங்க ஏன் கவலை படுறீங்க அவுங்க பாட்டுக்கு கத்திட்டு போகட்டும் நம்ம கள்ள குடியேறிகள் இருக்க பயம் ஏன் ...அவுங்க இருக்குற வரை நீங்க தான் முதல்வர் ..


Rangarajan Cv
ஜன 29, 2025 10:55

How irresponsible AK is? He should have shared the data with concerned people


KavikumarRam
ஜன 29, 2025 12:32

Always he is confused and cunning. He is the worst venom of India.


vbs manian
ஜன 29, 2025 10:22

தோல்வி பயத்தில் பயங்கர உளறல்.


Ray
ஜன 29, 2025 09:15

இந்த விஷயத்தில் தேர்தல் கமிஷனுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுவிட்டதாம் பிஜேபி க்கு வக்கீலாக ஓடிவருகிறதே


Shekar
ஜன 29, 2025 09:45

ஒரு முன்னாள் முதல்வர், தான் முதல்வர் ஆவதற்காக தேர்தல் பிரச்சாரத்தில் பக்கத்து மாநில அரசு உன் குடிநீரில் விஷம் கலக்கிறது என்று சொன்னால், அது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம். இதை கோர்ட் தானாக முன்வந்து கேட்டிருக்கவேண்டும். தேர்தல் கமிஷனாவது கேட்க்கிறதே. கர்நாடக அரசு காவிரியில் விஷம் கலக்கிறது என்று முன்னாள் அல்லது இந்நாள் முதல்வர்கள் பேச முடியுமா?


Iniyan
ஜன 29, 2025 09:10

இவனுக்கு பொய் சொல்லுவதே வேலை. இந்த விஷமியை நசுக்க வேண்டும்.


Kasimani Baskaran
ஜன 29, 2025 07:36

ஓவராக புளுகுவது பிரச்சினையில் கொண்டுபோய்விடும் என்பது கூடவா மேதை வாளுக்கு தெரியாது?


Ray
ஜன 29, 2025 10:14

கெஜ்ரிவாலுக்கு சொல்வதுபோல ஜாடையாக ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை