மூணாறில் போக்குவரத்து தடை
மூணாறு : கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு அருகே கேப் ரோட்டில் பாறை சரிந்ததால், போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கேப் ரோட்டைச் சுற்றிலும் நேற்று பகல் 3:00 மணி முதல் பலத்த மழை பெய்தது. அப்போது மலையில் இருந்து காட்டாற்று வெள்ளம் ரோட்டில் ஓடியது. இதில் பாறைகள் சரிந்து ரோட்டில் விழுந்தன. அப்போது வாகனங்கள் எதுவும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தேவிகுளம், சாந்தாம்பாறை பகுதி போலீசார் பாதுகாப்பு கருதி போக்குவரத்தை கட்டுப்படுத்தினர். மழை நின்றதும் போலீசார் கற்களை அகற்றினர். மழை தொடர வாய்ப்பு உள்ளதால் கேப் ரோடு வழியாக போக்குவரத்துக்கு தடை விதித்து இடுக்கி கலெக்டர் விக்னேஸ்வரி உத்தரவிட்டார். மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் முன் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு கூறியுள்ளார்.