உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துவக்கம்

கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துவக்கம்

மூணாறு: கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்று மூன்று நாட்களுக்கு பிறகு நேற்று முதல் போக்குவரத்து துவங்கியது. அந்த வழியில் மூணாறு அரசு தாவரவியல் பூங்காவில் ஜூலை 26 இரவில் மண் சரிவு ஏற்பட்டு, மூணாறு அந்தோணியார் காலனியைச் சேர்ந்த மினி லாரி டிரைவர் கணேசன் 58, இறந்தார். அதே பகுதியில் ஜூலை 27 காலையில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அதனால் தமிழகத்தில் இருந்து போடி மெட்டு வழியாக வந்த வாகனங்களும், பூப்பாறை, நெடுங்கண்டம், குமுளி உட்பட பல பகுதிகளைச் சேர்ந்த வாகனங்களும் மூணாறு நகருக்குள் வர இயலாத நிலை ஏற்பட்டது. சீரமைப்பு: நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் ஜூலை 28ல் காலை சீரமைப்பு பணிகள் துவங்கின. அப்பணிகள் ஒரே நாளில் முடிக்கப்பட்டு, நேற்று முன்தினம் ரோட்டில் படிந்த சேறு, சகதி ஆகியவற்றை அகற்றும் பணி நடந்தன. இதனிடையே நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மாவட்ட புவியியல் வல்லுனர்கள் ஆய்வு நடத்தி கலெக்டரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். அதன் அடிப்படையில் அந்த வழியில் போக்குவரத்துக்கு உத்தரவிடப்பட்டதால் மூன்று நாட்களுக்கு பிறகு நேற்று காலை 10:30 மணி முதல் போக்குவரத்து துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி