உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராஜஸ்தானில் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு நேர்ந்த துயரம்: தேர்வு எழுத அனுமதி மறுப்பு

ராஜஸ்தானில் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு நேர்ந்த துயரம்: தேர்வு எழுத அனுமதி மறுப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில், பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமியை தேர்வு எழுத பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்த விவகாரம் குறித்து குழந்தைகள் பாதுகாப்பு கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது.

கைது

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் பிளஸ் 2 படிக்கும் மாணவி ஒருவர் கடந்த ஆண்டு, உறவினர் மற்றும் அவரது நண்பர்களால் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டார். இது தொடர்பாக குற்றவாளிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

புகார்

இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு எழுத அந்த மாணவியை பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. இது தொடர்பாக, அந்த மாணவி அஜ்மீர் குழந்தைகள் பாதுகாப்பு கமிஷனில் புகார் அளித்துள்ளார்.

எதிர்ப்பு

அந்த ஆணையத்தின் தலைவி அஞ்சலி ஷர்மாவிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: பாதிக்கப்பட்ட நான், வகுப்புக்கு சென்ற போது, பள்ளியில் சூழ்நிலை கெட்டு விடும். இதனால் வீட்டில் இருந்தே பாடம் படிக்கும்படி நிர்வாகம் கூறியது. இதனை ஏற்றுக் கொண்டேன். வீட்டில் இருந்தே தேர்வுக்கு தயார் ஆனேன். பிளஸ் 2 தேர்வுக்கு நுழைவுச்சீட்டு வாங்க சென்ற போது, நுழைவுச்சீட்டு வழங்கவில்லை. கேட்டால், பள்ளி மாணவிகள் பட்டியலில் பெயர் இல்லை எனக்கூறி நுழைவுச்சீட்டு இல்லை என தெரிவித்துள்ளார்.அப்போது தான், மற்ற மாணவிகளின் பெற்றோர்கள் எதிர்ப்பு காரணமாக மறைமுகமாக என்னை பள்ளியில் இருந்து நீக்கியது தெரியவந்தது எனக்கூறியுள்ளார். இது தொடர்பாக, குழந்தைகள் பாதுகாப்பு கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்புசாமி
ஏப் 06, 2024 06:59

ராஜஸ்தானில் யார் ஆட்சி நடக்குது.


ஆரூர் ரங்
ஏப் 05, 2024 19:01

இங்கு ஒரு மரணத்துக்குப் பழி வாங்க கணியாமூர் பள்ளியையே 21 ம் பக்க வர்க்கம் சூறையாடி கொளுத்தியதே.நூற்றுக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது. ஆண்டுகளாகியும் நடவடிக்கை இல்லை.


Azar Mufeen
ஏப் 05, 2024 18:26

மற்ற மாணவிகளின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தால். இதுதான் வடக்கன்ஸ்க்கும் தமிழனுக்கும் உள்ள வித்தியாசம்


subramanian
ஏப் 05, 2024 14:57

அந்த பள்ளி நிர்வாகிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்


subramanian
ஏப் 05, 2024 14:55

படிப்பு , தேர்வு எல்லாவற்றிற்கும் அந்த மாணவிக்கு உரிமை உண்டு


Mohan
ஏப் 05, 2024 14:49

இது தான் இந்தியா தங்கள் பெண்ணொத்த மற்றோர் பெண்ணின் துயர் துடைக்க முடியாத பெற்றோர் என்ன பெற்றோரோ?


Srinivasan Krishnamoorthi
ஏப் 05, 2024 14:24

மற்ற மாணவிகள் பெற்றோர் இதில் காரணமானவர்களை irunthal, அவர்கள் குழந்தைகள் தேர்வு எழுத அனுமதி மறுக்க பட வேண்டும் அல்லது மீண்டும் இந்த மாணவியுடன் எழுத வைக்க பட வேண்டும்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி