உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரயில் கட்டணம் ஜூலை 1 முதல் உயர்கிறது

ரயில் கட்டணம் ஜூலை 1 முதல் உயர்கிறது

புதுடில்லி: ரயிலில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்பவராக இருந்தால், 500 கி.மீ., வரையிலான தொலைவுக்கு டிக்கெட் கட்டண உயர்வு இல்லை. அதே நேரம் 500 கி.மீ.,க்கு மேல் பயணிப்போருக்கு டிக்கெட் உயர்வு இருக்கும். 'ஏசி' அல்லாத எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கு, 500 கி.மீ., மேலான பயணத்தில், 1 கி.மீ.,க்கு ஒரு பைசா என்ற விகிதத்தில் கணக்கிட்டு, கட்டணம் உயர்த்தப்படுகிறது. உதாரணத்துக்கு, 1,000 கி.மீ., பயணத்திற்கான டிக்கெட் கட்டணம், முன்னர் இருந்ததை, 10 ரூபாய் அதிகரிக்கும். அதே போல், 'ஏசி' பெட்டிகளில் பயணிப்போருக்கு, 500 கி.மீ.,க்கு மேல், 1 கி.மீ.,க்கு 2 பைசா வீதம் கட்டணம் உயர்த்தப்படுகிறது. மேலும், மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளில் கட்டண உயர்வு இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. சிறிதளவே ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதால், பயணியருக்கு பெரிதாக சிரமம் இருக்காது என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Gajageswari
ஜூன் 29, 2025 05:32

நல்ல முடிவு. சாலை போக்குவரத்து செய்த முதலீடு போன்று 4மடங்கு அதிகம் முதலீடு தேவை


A.Gomathinayagam
ஜூன் 25, 2025 14:08

பராமரிப்பு செலவு உயர்கையில் கட்டணம் உயர்த்துவதில் தவறில்லை .அதே சமயம் சாமான்யர்கள் பயணிக்க அதிக ரயில் சேவை மிக மிக அவசியம்


R Hariharan
ஜூன் 25, 2025 13:13

பரவில்லை. ஆனால் பல இடங்களில் ரயில் சேவை தேவை. வந்த பாரத் குறைக்கப்பட்டு எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் ரயில்கள் விட வேண்டும். மைசூரு பெங்களூரு செங்கோட்டை, மைசூர் ராமேஸ்வரம், செங்கோட்டை துதிகரின், திருச்செந்தூர், ராமேஸ்வரம், கன்னியாகுமாரி ரயில்கள் விட வேண்டும்.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜூன் 25, 2025 12:02

ரயில் கட்டணங்களை குறைந்த அளவில் உயர்த்துவது ஏற்கக்கூடியதே. ஆனால், போதுமான ரயில்களை இயக்காமல் இருப்பதுதான் மக்களை வதைக்கிறது. போதுமான ரயில்களை இயக்காமல் செயற்கையாக தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறது. பின்பு தட்கல், ப்ரீமியம் தட்கல் என்று வசூலிக்கிறார்கள். மோடிஜியின் ஆட்சியில் இந்த அவலங்கள் தொடர்வதுதான் கொடுமை.


அப்பாவி
ஜூன் 25, 2025 08:08

இதுதாண்டா வளர்ச்சி. கொஞ்சம் கொஞ்சமா உருவுனா மக்களுக்கு வலி தெரியாது.


Nagarajan D
ஜூன் 25, 2025 08:34

ஏண் உங்க விடியாத ஆட்சியில் எத கட்டணமும் ஏற்றவே இல்லையா? எத விட்டீங்க எல்லாவற்றையுமே ஏத்திவிட்டாச்சு வீட்டு வரி மின்சாரக்கட்டணம் எல்லாத்தையும் ஏத்திட்டு திரியுறீங்க


Nagendran,Erode
ஜூன் 25, 2025 09:01

முட்டாப் பயலே ஆயிரம் கி.மீ பத்து ரூபாய் கூடுதல் என்பது உனக்கு அதிகமா? உன் மண்டையில மூளை இருக்கா இல்ல அதையும் யாரும் உருவிட்டானுகளா?


vivek
ஜூன் 25, 2025 09:03

ட்ரெயின்ல டிக்கெட் வாங்காம ஒசில போற அப்பாவிக்கு ரொம்ப கவலை....


Rajan A
ஜூன் 25, 2025 07:32

சம்பளத்தின் பெரும் பகுதியை மத்திய மாநில அரசுகள் பிரித்து கொண்டுதான் இருக்கின்றன. மிச்சம் இருப்பதையும் புடுங்க ரயில்வே தயார்