உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரயில் டிக்கெட் முன்பதிவு; புதிய விதிமுறைகள் அமல்: உங்க கருத்துக்களை கமென்ட் செய்யுங்கள் வாசகர்களே!

ரயில் டிக்கெட் முன்பதிவு; புதிய விதிமுறைகள் அமல்: உங்க கருத்துக்களை கமென்ட் செய்யுங்கள் வாசகர்களே!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில், இந்திய ரயில்வே கொண்டு வந்த சில முக்கிய மாற்றங்கள் இன்று (மே 01) முதல் அமலுக்கு வந்தது. உங்களுடைய கருத்துக்களை கமென்ட் செய்யுங்கள் வாசகர்களே!நீண்ட துார பயணம் மேற்கொள்ளும், பயணியரின் முதல் சாய்சாக இருப்பது ரயில் தான். முன்பதிவு செய்த பெட்டியில் பயணம் செய்யும் பயணியருக்காக, தனி இருக்கை ஒதுக்கிக் கொடுக்கப்படும். படுக்கைகளில் அமர்ந்தும், துாங்கிக் கொண்டும் நிம்மதியாக செல்லலாம்.கோடை விடுமுறையில் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்வார்கள் என்பதால், டிக்கெட் முன்பதிவு விதிகளில் முக்கிய மூன்று மாற்றங்களை இந்திய ரயில்வே செய்துள்ளது.* பயணிகள் வசதிக்காக அனைத்து ரயில்களுக்கும் முன்பதிவு காலத்தை ஒரே நேரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக, வெவ்வேறு ரயில்களில் வெவ்வேறு முன்பதிவு காலங்கள் இருந்தன. * எக்ஸ்பிரஸ் அல்லது சூப்பர்பாஸ்ட் என எந்த ரயிலாக இருந்தாலும், அனைத்து ரயில்களுக்கும் சரியாக 90 நாட்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும்.* தட்கல் மூலம் கடைசி நேரத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதில் நேரங்கள் மாற்றப்பட்டு உள்ளது. ஏசி வகுப்புகளுக்கான தட்கல் முன்பதிவுகள் காலை 10 மணிக்கும், ஸ்லீப்பர் வகுப்பு தட்கல் டிக்கெட்டுகளை காலை 11 மணி முதல் முன்பதிவு செய்யலாம். * ஒரு பயனர் ஐடி ஒரு நாளைக்கு 2 தட்கல் டிக்கெட்டுகளை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.* காத்திருப்புப் பட்டியலில் உள்ள டிக்கெட்டுகளுக்கு, முழு பணத்தைத் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.* புறப்படுவதற்கு 48 மணிநேரத்திற்கும் முன்பாக டிக்கெட்டை ரத்து செய்தால், 75 சதவீத பணம் திரும்பக் கிடைக்கும். புறப்படுவதற்கு 24 முதல் 48 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால், உங்களுக்கு 50 சதவீத பணம் திரும்ப கிடைத்துவிடும். * 24 மணிநேரத்திற்குள் ரத்து செய்தால், எந்தத் தொகையும் திரும்பக் கிடைக்காது. இந்த முக்கிய மாற்றங்கள் இன்று (மே 01) முதல் அமலுக்கு வந்தது. இன்று முதல் அமலுக்கு வந்துள்ள புதிய நடைமுறைகள் குறித்து உங்கள் கருத்து என்ன என்பதை கமென்ட் செய்யுங்கள் வாசகர்களே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

KB RAO
மே 01, 2025 17:15

AS PER TRAIN RESERVATION PROGRAM INITIAL TICKET ALLOTMENT WILL BE FROM CENTRE OF EACH COACH & ON BOTH SIDES FOR SAFETY MOVEMENTS ON SPEED. HENCE LATE BOOKING WILL BE ALLOTTED TO FIRST & LAST ROWS ON EACH COACH.


Sainathan Veeraraghavan
மே 01, 2025 16:06

Under Tatkal it will be cumbersome for a family of 4 persons to reserve tickets. Because under 1 ID only 2 tickets can be reserved. Pl Change rules


Raman.V
மே 01, 2025 15:08

Advance booking 60 days prior to the date of journey. It is not 90 days as mentioned in your article. Please clarify.


ஜெ.என்.தர்மராஜ்.திருப்பூர்.
மே 01, 2025 15:06

முன் பதிவு செய்தவர்களுக்கு முதலில் இடங்கள் கிடைக்கும் படி செய்ய படுக்கை வசதி பெட்டிகளை அதிகரிக்க வேண்டும். பேருந்து போல் பயணச்சீட்டு எடுத்து பயணிக்க எளிதாக இருக்கும் படி சட்ட திட்டங்கள் அமைக்க வேண்டும்.


vidhura
மே 01, 2025 14:20

When we booked for a 48 hour journey tickets , Katpadi to Dwaraka we were allotted last 2 tickets in 3A. We cancelled and booked in 2A and got again last 2 tickets....when such a long distance travel is there why should the allotment was near door...we could not forget the disturbances in travel in your life....we could see people travelling short distances where given berths inside .


J.Isaac
மே 01, 2025 14:15

உண்மையாகவே மக்களுக்கு ரயிலவே சேவை செய்கிறது என்றால் மீண்டும் முதியவருக்கு கட்டண சலுகை அளிக்கப்பட வேண்டும்.


Ravi Aruna
மே 01, 2025 13:57

இதென்னவோ திருப்பதி தேவஸ்தான பதிவு போல 90 நாட்களுக்கு முன்பு பதிசெய்யலாம் என்று மாற்றியது சரியில்லை. 60 நாட்கள் போதும்.


A.Gomathinayagam
மே 01, 2025 13:57

ரயில்கட்டணத்தை சிறிது உயர்த்தி ,பயணிகள் அடிபடைவசதியையை மேம் படுத்துங்கள் .சாதாரண ரயில் சேவையை அதிகரிக்க வேண்டும் பகலில் இரு நகரங்களுக்கு இடையே உட்கார்ந்து பயணிக்கும் ரயில்கள் அதிக அளவில் விட வேண்டும்


sridhar
மே 01, 2025 13:24

முன்பதிவு செய்தபின்னால் அதே seat / berth எண்ணில் எந்த ரயிலில் வேண்டுமானாலும் பயணம் செய்து எங்கு வேண்டுமானாலும் போகலாம் என்று Vidhi முறை வேண்டும்.


பாமரன்
மே 01, 2025 12:37

24 மணி நேரத்துக்குள் கேன்சல் செய்தால் மொத்த பணமும் கோவிந்தா என்பது அநியாயம். முன் பதிவு நாட்கள் அதிகபட்சம் 60 போதும். பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் அதிக அளவில் சிறப்பு ரயில்கள் விடனும். இந்தியாவில் பயணிகள் ரயில் மக்களுக்கு அத்யாவசிய தேவை... பாமரன்களுக்கு... பணக்கார மக்களுக்கு இல்லைன்னு உணரனும்


புதிய வீடியோ