உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெளிப்படைத்தன்மை!

வெளிப்படைத்தன்மை!

ஓட்டுத்திருட்டு புகாரில் தேர்தல் கமிஷன் அளிக்கும் விளக்கத்தை விட, அதற்கு எதிரான தரவுகள் சவால் நிறைந்ததாக உள்ளன. இதுபற்றி யாரேனும் கேள்வி எழுப்பினால், அதற்கு வெளிப்படைத்தன்மையுடன் அந்த அமைப்பு பதிலளித்து, குறைகளை சரிசெய்ய வேண்டும். சுப்ரியா சுலே லோக்சபா எம்.பி., தேசியவாத காங்., சரத் பவார் பிரிவு

வேதனையில் இந்தியர்கள்!

'எச்1 - பி' விசா கட்டணத்தை அதிகரித்து, பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் பரிசை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இது, இந்தியர்களை வேதனைக்குள்ளாக்கி உள்ளது. ஏற்கனவே, 50 சதவீத கூடுதல் கட்டணத்தால், நம் நாட்டிற்கு 2.17 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மல்லிகார்ஜுன கார்கே தேசிய தலைவர், காங்கிரஸ்

இளைஞர்களுக்கு அவமானம்!

தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தி குழப்பத்தை ஏற்படுத்த இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கும் எந்த அரசியல்வாதியும் அவர்களுக்கு ஓர் அவமானத்தை ஏற்படுத்துகிறார். மாறாக, கல்வி, வேலைவாய்ப்பு, சமூக நலன் சார்ந்தவற்றில் அவர்களை ஈடுபடுத்தினால் எதிர்காலம் சிறக்கும். மிலிந்த் தியோரா லோக்சபா எம்.பி., சிவசேனா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !