உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏர் இந்தியாவில் பயணமா!!! இதை படியுங்கள்..

ஏர் இந்தியாவில் பயணமா!!! இதை படியுங்கள்..

- நமது நிருபர்-

ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் சமீபத்திய காலங்களில், தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டு சேவைகள் தாமதம் மற்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த ஓராண்டில் ஏற்பட்ட டாப் 10 தொழில்நுட்ப கோளாறுகள் குறித்து ஓர் சிறப்பு அலசல்.

ஆகஸ்ட் (2026)

1. தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் புக்கெட்டில் இருந்து டில்லிக்கு வந்த, 'ஏர் இந்தியா' விமானம் நடுவானில் குலுங்கியது. விமானம் சில நொடிகளில் 300 அடி கீழே செங்குத்தாக சரிந்ததில் 24 பேர் காயமடைந்தனர். பின்னர் விமானம் டில்லியில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.2. கோல்கட்டாவிலிருந்து சென்னை செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கடுமையான தொழில்நுட்பக் கோளாறால் 6 மணி நேரம் தாமதமானது. விமான நிறுவனம் பயணிகளுக்கு முறையான உணவோ, தகவலோ வழங்காததால் பயணிகள் கொல்கத்தா விமான நிலையத்தில் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மே (2026)

3. டில்லியில் இருந்து 230 பயணிகளுடன் சான் பிரான்சிஸ்கோ சென்ற ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகச் சீன வான்வெளியில் இருந்து டில்லிக்குத் திரும்பியது.4. பெங்களூருவில் இருந்து டில்லி நோக்கி 171 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா ஏ320 விமானத்தின் இன்ஜினில் தீப்பிடித்ததை அடுத்து, விமானி உடனடியாக அவசரநிலையை பிரகடனப்படுத்தி டில்லி விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கினார்.

மார்ச் (2026)

5. டில்லியில் இருந்து லண்டன் ஹீத்ரோ சென்ற ஏர் இந்தியாவின்A350-900 (விமானம் AI-111) சவுதி அரேபியா வான்பரப்பில் பறந்தபோது திடீர் அதிர்வுகள் மற்றும் விசித்திரமான சத்தங்கள் ஏற்பட்டன. பாதுகாப்பு காரணங்களுக்காக 7 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு விமானம் மீண்டும் டில்லிக்கே திரும்பி வந்தது.6. நியூயார்க்கில் இருந்து டில்லி நோக்கி 300 பயணிகளுடன் வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா ஏ350 விமானத்தில் (AI102) நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் அயர்லாந்தின் ஷானன் விமான நிலையத்திற்கு விமானம் அவசரமாகத் திருப்பி விடப்பட்டு தரையிறக்கப்பட்டது.

அக்டோபர் (2025)

7. மும்பையிலிருந்து அமெரிக்காவின் நெவார்க் நகருக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் (AI 191) நடுவானில் பறந்தபோது ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, உடனடியாகப் பயணிகளுடன் மீண்டும் மும்பை விமான நிலையத்திலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ஆகஸ்ட் (2025)

8. திருவனந்தபுரத்திலிருந்து டில்லி நோக்கி 150 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் பழுது ஏற்பட்டது. இதையடுத்து விமானம் அவசரமாகச் சென்னை விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டு தரையிறக்கப்பட்டது.

ஜூலை (2025)

9. கோழிக்கோட்டிலிருந்து தோஹா நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், டேக்-ஆப் செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் கேபின் ஏர் கண்டிஷனிங் (AC) அமைப்பில் பழுது ஏற்பட்டது. மூச்சுத்திணறல் அபாயம் தவிர்ப்பதற்காக 2 மணி நேரத்திற்கு பின் விமானம் மீண்டும் கோழிக்கோட்டிலேயே தரையிறக்கப்பட்டது.

ஜூன் (2025)

10. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விபத்தில் விமானத்தில் இருந்தவர்கள் மற்றும் தரையில் இருந்தவர்கள் உள்பட மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.விமானம் மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டிடத்தின் மீது மோதி வெடித்துச் சிதறியது.இதுபோல கடந்த ஒரு ஆண்டில் மட்டுமே சிறிய சிறிய ஏராளமான தொழில்நுட்ப கோளாறுகளை ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்கள் சந்தித்து, பயணிகள் கடும் சிரமம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.ரீல்ஸ் வீடியோ பாருங்கள்!ஏர் இந்தியா விமானங்களால் பயணிகள் பாடு திண்டாட்டம்; ஒரே ஆண்டில் இவ்வளவு தொழில்நுட்ப கோளாறுகளா?தினமலர் பிரத்யேக வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் https://youtube.com/shorts/_wrfCUcCYZQ?si=EeItZ5V0ofjeLNBP


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

சிவம்
ஆக 29, 2026 18:05

இவர்களது இந்த சேவை லட்சணத்தில், இவர்களது ஊழியர்கள் அலப்பறை சொல்லி மாலாது. ஒரு முறை தில்லி விமான நிலையத்தில், ஒன்றரை மணி நேரம் முன்பு air india விமான கவுண்டரில் வரிசையில் காத்திருக்க வேண்டி வந்தது, ஏதோ கம்ப்யூட்டர் தொழில் நுட்ப கோளாறு காரணமாக, அரை மணி காக்க வைத்தார்கள். என் முறை வந்த போது நீங்கள் தாமதமாக வந்துவிட்டீர்கள் என்று சொல்லி போர்டிங் பாஸ் தர மறுத்துவிட்டார்கள். எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்கவில்லை. லேட்டாக வந்தாக கூறி refund கிடையாது என்றும் சொல்லிவிட்டார்கள். நான் பல முறை இமெயில் அனுப்பியும் இன்று வரை அவர்கள் தரப்பு வாதத்தை மட்டுமே சொல்லி கேசை முடிவிட்டார்கள். என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.


Saravanan D
ஆக 29, 2026 16:48

Can you publish a report about Indigo's WORST customer services and complaints lodged?


பாமரன்
ஆக 29, 2026 13:51

ஏதோ ஏர் இந்தியா மட்டுமே தொழில்நுட்ப பிரச்சினைகள் மற்றும் தாமதத்தை சந்திக்கிறது மாதிரி


SUBRAMANIAN P
ஆக 29, 2026 14:20

அதுதான் அதிகமா சந்திக்கிறது. அதனால் சந்தி சிரிக்கிறது.


பாமரன்
ஆக 29, 2026 14:52

சுப்ரமணியம் ஸார்... என்னுடைய கருத்தில் முதல் ரெண்டு வரிகள் மட்டுமே உண்மையின் ஒலக்கைய ஒத்து போனதால் போட்ருக்காங்க... மீத வரிகள் வந்திருந்தா நீங்க இதை கேட்டிருக்க மாட்டீங்க...


Kalyan Singapore
ஆக 29, 2026 13:38

அதானி குழுமம் புதிய ஒரு விமனக்கம்பனி தொடங்க உத்தேசித்துள்ளது என்றொரு செய்தி உண்மையா தெரியவில்லை அடிபடுகிறது.


ஆரூர் ரங்
ஆக 29, 2026 14:26

அப்படி எந்த திட்டமும் இல்லை என மறுத்துவிட்டார்கள்.


SUBRAMANIAN P
ஆக 29, 2026 13:34

ஏர் இந்தியா, கவர்ன்மெண்ட் சமாச்சாரமா இருக்கும்போதே அதை முடித்த்துவிட்டார்கள். டாடா எடுத்து எவ்வளவுதான் செலவு செய்யமுடியும்.. அரசு மருத்துவமனைகள், அரசு பஸ் போக்குவரத்துக்கு, மற்ற எல்லா அரசு துறைகளும் இப்படித்தான் இருக்கும். எல்லாவற்றிற்கும் காரணம், அலட்சியம்.. யார் நம்மை என்ன செய்துவிடமுடியும் என்று. தனியாரில் அப்படி இல்லை. வேலை போய்விடும். அரசு பணியாளருக்கு அப்படி இல்லை. இதுதான் தனியாருக்கும், அரசுக்கும் இப்போதுள்ள வித்தியாசம். அரசுக்கு எல்லாவற்றிற்கும் சங்கம், போராட்டம், வேலைநிறுத்தம் இருக்கிறது.


S Subramanian
ஆக 29, 2026 12:03

Air India inherited the old planes as well as the old government staff. All the old staff should be dismissed and new younger staff should be recruited.


Barakat Ali
ஆக 29, 2026 11:56

கரெக்ட்டா சொன்னீங்க ....


Shankar Sarangan
ஆக 29, 2026 11:38

இதில் இவர்களுடைய விமான டிக்கெட் விலையோ மற்ற விமான சேவைகளைக்காட்டிலும் அதிகம்.


Kavi Priyan Adelaide
ஆக 29, 2026 11:26

ஏர் இந்திய மீது என்ன கோபமோ..??


SUBRAMANIAN P
ஆக 29, 2026 13:27

நீங்கதான் ஒரு ரவுண்டு போயிட்டு வாங்களேன்.


அப்பாவி
ஆக 29, 2026 11:15

விமானம் தாமதமாகும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 10000 ரூவா ஒவ்வொரு பிரயாணிக்கும் குடுக்கணும் னு சட்டம் போடுங்க. இந்த லட்ஷணத்தில் ஃ பாரின் CEO வேற.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி