உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுல் போராட்டத்துக்காக மரங்கள் வெட்டி சாய்ப்பு

ராகுல் போராட்டத்துக்காக மரங்கள் வெட்டி சாய்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: லோக்சபா தேர்தல் விதிமீறலை கண்டித்து, காங்கிரஸ் சார்பில் சுதந்திர பூங்காவில் நடக்கவுள்ள போராட்டத்தில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பங்கேற்கவுள்ளார். இதற்காக அங்கு பல ஆண்டுகளாக இருந்த மரங்களை காங்கிரசார் வெட்டிச் சாய்த்ததாக புகார் எழுந்துள்ளது. கர்நாடகாவில் நடந்த லோக்சபா தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் குற்றஞ்சாட்டினார். இதுகுறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், ஆகஸ்ட் 5ம் தேதியன்று பெங்களூரில் அவரது தலைமையில் காங்கிரஸ் போராட்டம் நடத்த உள்ளது. சுதந்திர பூங்காவில் நடக்கவுள்ள இந்த போராட்டத்தில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மாநில அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள், கட்சியின் மாநில நிர்வாகிகள் உட்பட, பலரும் பங்கேற்பர். ராகுலின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை செய்யும்படி, முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இதன்படி போலீஸ் அதிகாரிகள், முன்னேற்பாடுகளை செய்கின்றனர். போராட்டத்துக்கு இடையூறாக இருக்கும் என்பதால், சுதந்திர பூங்காவில் உள்ள மரங்களை வெட்டும்படி, உப்பார்பேட் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மஹாதேவசாமி உத்தரவிட்டு உள்ளார். எனவே போலீசார், மரங்களை வேருடன் வெட்டி அகற்றுகின்றனர். பல ஆண்டுகளாக வளர்க்கப்பட்ட மரங்களை வெட்டுவதை, பொது மக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கண்டித்துள்ளனர். கடும் கண்டனம் எழுந்த நிலையில், பெயரளவில் இன்ஸ்பெக்டர் மஹாதேவசாமி மீது மாநகராட்சி அதிகாரிகள் புகார் செய்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Santhakumar Srinivasalu
ஆக 03, 2025 11:00

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்கிற வாசகம் எல்லாம் இந்த காங்கிரஸ் கட்சிகளுக்கு தெரியாது போல!


Jack
ஆக 03, 2025 08:55

அங்கே மரம் வெட்டினா இங்கே கனிம வளங்களை வெட்டி வெளிநாடு வரை ஏற்றுமதி


அப்பாவி
ஆக 03, 2025 07:36

கொள்கை கூட்டணி வெக்க பா.ம.க ரெடியா இருக்கு.


Iyer
ஆக 03, 2025 01:51

காங்கிரஸ் கட்சியின் சொத்துக்களை பறிமுதல் செய்யுங்கள். வெட்டப்பட்ட ஒவ்வொரு மரத்திற்கும் 50 புதிய மரங்களை நட்டு 25 வருட பராமரிப்பு செலவுகளை வசூல் செய்யவேண்டும். ஆனால் அங்குள்ள CM மகா ஊழல் பேர்வழி. அவர் அவ்வாறு செய்வாரா ?


M Ramachandran
ஆக 03, 2025 01:22

ஆட்களியயேஆ வெட்டி சாய்க்கும் கூட்டணி கட்சியிலேயிருக்கும் அடிமைய்ய கட்சிக்கு இதெல்லாம் ஜுஜுபி.எதற்கெடுத்தாலும் அமெரிக்காவைய்ய பார் பாகிஸ்தானை பார் என்று உளறும் சைக்கோ அயல்நாட்டு பித்து கொண்ட தலைவராக கொண்ட குடும்பக்கட்சியை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை