உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆம் ஆத்மி.,க்கு திரிணமுல் ஆதரவு: மம்தாவுக்கு கெஜ்ரிவால் நன்றி

ஆம் ஆத்மி.,க்கு திரிணமுல் ஆதரவு: மம்தாவுக்கு கெஜ்ரிவால் நன்றி

புதுடில்லி: டில்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி.,க்கு திரிணமுல் காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் கூறினார்.டில்லியில் பிப். 5 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. ஓட்டு எண்ணிக்கை பிப்.8 ஆம் தேதி நைடைபெறுகிறது என்று தலைமை தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது.அதை தொடர்ந்து, காங்கிரஸ், ஆம் ஆத்மி, பா.ஜ., ஆகிய கட்சிகளை தேர்தல் பணிகளில் மும்முரமாக உள்ளன.இந்நிலையில் நேற்று ஆம் ஆத்மி.,க்கு சமஜ்வாதி ஆதரவு அளிப்பதாக அறிவித்தது. அதை தொடர்ந்து சமஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷிற்கு கெஜ்ரிவால் நன்றி தெரிவித்தார்.அதை தொடர்ந்து இன்று திரிணமுல் காங்கிரஸ் ஆம் ஆத்மி.,க்கு ஆதரவு அளித்துள்ளது.இதற்கு நன்றி தெரிவித்து கெஜ்ரிவால் எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:டில்லி தேர்தலில் ஆம் ஆத்மி.,க்கு ஆதரவு அளித்த மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு நன்றி. நீங்கள் நல்ல நேரத்திலும், சிக்கலான நேரத்திலும் எப்போதும் ஆதரவாகவும், ஆசியும் அளித்து உறுதுணையாக இருந்துள்ளீர்கள் நன்றி. இவ்வாறு கெஜ்ரிவால் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kumar Kumzi
ஜன 09, 2025 15:06

காட்டேரி மூர்க்க கூட்டத்தின் கைக்கூலிகள் தேசியத்துக்கு எதிராக செயல்படும் தேசத்துரோகிகள்


Mrm. Vasan
ஜன 08, 2025 18:43

அரிப்பவனுக்கு சொறிபவனே கூட்டாளி.


sankaranarayanan
ஜன 08, 2025 18:18

இனம் இனத்தோடுதான் சேரும் என்பார்கள் அது உண்மையாகிவிட்டதே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை