உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாலை பள்ளத்தால் நேரிட்ட விபத்து: மினி லாரி கவிழ்ந்து 7 பேர் பலி

சாலை பள்ளத்தால் நேரிட்ட விபத்து: மினி லாரி கவிழ்ந்து 7 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்; ஆந்திராவில் சாலையில் இருந்த பள்ளத்தில் இறங்காமல் மினி லாரியை திருப்பிய போது ஏற்பட்ட விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இன்று காலை ஒரு மினி லாரி ஒன்று முந்திரி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு தாடிமல்லா என்ற ஊரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியில் முந்திரி மூட்டைகள் மீது ஏறி தொழிலாளர்கள் 8 பேர் உட்கார்ந்திருந்தனர்.தேவரப்பள்ளி என்ற இடத்தில் லாரி வந்தபோது சாலையில் பள்ளம் இருப்பதைக் கண்ட ஓட்டுநர் வண்டியை அதில் இறங்காமல் இருக்க திருப்பி உள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் திடீரென அருகில் உள்ள கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது.இந்த கோரவிபத்தில் தொழிலாளர்கள் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்க அவரை அங்குள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kalyanaraman
செப் 11, 2024 18:01

அரசின் 0 விபத்து எதிர்பார்ப்பு நல்லது தான். அதற்கு சாலைகளை சரியாக பராமரித்தல் மிக மிக அவசியம். அனைவரும் சாலை வரி கட்டுகிறோம். நுகர்வோர் நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடுக்கலாமா? தினமலர் இதற்கு ஒரு விழிப்புணர்வு கட்டுரை வெளியிட்டால் வாசகர்களுக்கு சரியான புரிதல் ஏற்படும்.


Chennaivaasi
செப் 11, 2024 12:05

சென்னை தாம்பரம் முதல் வாலாஜாபாத் வரை உள்ள பகுதி தொழில் வழி தடமாக உள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சாலையை கொண்டு தான் தொழில் வளர்ச்சியை பற்றி இந்த அரசு பெருமை பீற்றிக்கொண்டு உள்ளது. இப்போது இந்த சாலையின் நிலை மிகவும் பரிதாபம். மிக மோசமான பராமரிப்பு, இரவு விளக்கு வசதி இன்மை, படப்பை பால பணி கடந்த நான்கு ஆண்டுகளாக நிறைவேறாமை போன்ற நிலைமையை கொண்டுள்ள இந்த சாலையை ஒழுங்காக பராமரிக்காவிட்டால் இருக்கும் முதலீடும் வெளியே சென்றுவிடும். இந்த சாலை மட்டுமில்லை எந்த சாலையும், தேசிய நெடுஞ்சாலை உட்பட நல்ல நிலையில் இல்லை என்பது மிகவும் வருத்தம். இவையே விபத்துக்கு முக்கிய காரணம்,


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை