உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அநியாய வரி விதிக்கும் டிரம்ப்: அமெரிக்காவுக்கு பாடம் கற்பிப்பது எப்படி? தேசபக்தி கொண்ட இந்தியராக கருத்து சொல்லுங்க வாசகர்களே!

அநியாய வரி விதிக்கும் டிரம்ப்: அமெரிக்காவுக்கு பாடம் கற்பிப்பது எப்படி? தேசபக்தி கொண்ட இந்தியராக கருத்து சொல்லுங்க வாசகர்களே!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ரஷ்யா- உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யாவிடம் பேசிப் பார்த்தார். ஆனால் டிரம்பின் கோரிக்கைகளை ரஷ்யா கண்டு கொள்வதாக இல்லை. இதனால் ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்கும் நோக்கில், அந்த நாட்டிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு வரி விதிப்பதாக அறிவித்துள்ளார் டிரம்ப்.முதலில் 25 சதவீதம் வரிவிதிப்பை அறிவித்த டிரம்ப், அடுத்த சில நாட்களில் மேலும் 25 சதவீதம் வரியை விதித்தார். இதனால் அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களின் மீதான வரி விதிப்பு 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபரின் நடவடிக்கை நேர்மையற்றது; நியாயமற்றது என்றும் தெரிவித்துள்ளது.ரஷ்யாவிடம் இருந்து யுரேனியம், உரம் ஆகியவற்றை கொள்முதல் செய்யும் அமெரிக்கா, இந்தியாவை மட்டும் கச்சா எண்ணெய் வாங்க கூடாது என்று வலியுறுத்துவது எந்த வகையில் நியாயம் என்றும் மத்திய அரசு கேள்வி எழுப்பியுள்ளது. இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு, பிரேசில், சீனா ஆகிய பிரிக்ஸ் நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.அமெரிக்க அதிபரின் வரி விதிப்பு, சர்வதேச சட்ட விதிமுறைகள், உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளுக்கு எதிரானது என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ரஷ்ய கச்சா எண்ணெய் விவகாரம் மட்டுமின்றி, வேறு ஒரு முக்கிய காரணமும் இருக்கிறது.இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்த அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில், அமெரிக்க வேளாண் உற்பத்தி பொருட்கள், பால் பொருட்களை இந்தியாவில் வரி விதிப்பின்றி விற்பனை செய்ய ஒப்புக் கொள்ள வேண்டும் என்று அந்த நாடு எதிர்பார்க்கிறது. அதற்கு இந்தியா முற்றிலும் மறுத்துவிட்டது. இந்தியா, வேளாண்மை மற்றும் அது சார்ந்த உப தொழில்களான பால் உற்பத்தி, கால்நடை பராமரிப்பு போன்றவற்றை பிரதானமாக சார்ந்து இருக்கும் நாடு என்பதே அதற்கு காரணம்.டில்லியில் இரு நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 'இந்திய விவசாயிகள், மீனவர்கள், பால் உற்பத்தியாளர்கள் ஆகியோரின் நலன்களை பாதுகாத்தே தீருவோம். அதற்காக எத்தகைய விலை கொடுக்க வேண்டி இருந்தாலும் அதற்கு இந்தியா தயாராக இருக்கிறது' என்று உறுதிப்பட தெரிவித்திருந்தார். பிரதமரின் இத்தகைய திட்டவட்டமான அறிவிப்பு, அமெரிக்காவுக்கு அளித்த நேரடி பதிலாக கருதப்படுகிறது.இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு நெருக்கடி தரும் நோக்கத்துடன் தான் டிரம்ப் இவ்வாறு வரி விதிப்பை செய்து வருகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இத்தகைய சூழ்நிலையில், இந்தியர் என்ற முறையில் நாம் ஒவ்வொருவரும் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டியது அவசியம்.

கருத்து சொல்லுங்க வாசகர்களே!

அமெரிக்க வரிவிதிப்பை எவ்வாறு எதிர்கொள்வது, இந்த விவகாரம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், இது இந்தியாவுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாக கருதலாமா,மத்திய அரசின் நடவடிக்கைக்கு தேசபக்தி கொண்ட இந்தியராக நாம் எந்த வகையில் ஆதரவு தெரிவிப்பது என்பது குறித்து, வாசகர்கள் ஆகிய நீங்கள் கருத்து தெரிவிக்க அழைக்கிறோம். உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள் வாசகர்களே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 378 )

Santhanam
செப் 08, 2025 11:49

வெள்ளையர்கள் எப்பொழுதும் அடுத்த நாட்டினத்தவராக மதிப்பது இல்லை அவர்கள் அடிமையாகவே இருக்க நினைப்பார்கள் ஆனால் பாரதம் தனது வலிமையை நிரூபித்துள்ளது சுய சார்பு நிலையை எட்டியுள்ளது அதன் வளர்ச்சி 7.2 % வளச்சியடைந்து பொருளாதாரத்தில் மிக முன்னேறியுள்ளது அவர்களுக்கு பிடிக்கவில்லை நாம் செய்ய வேண்டியது அமெரிக்க பொருட்களை பாரதத்தின் அனுமதிக்க வேண்டாம் அப்படி வந்தாலும் நம் மக்கள் அதனை தொட்டுக்கூட பார்க்காமல் புறக்கணிக்க வேண்டும்


R SRINIVASAN
செப் 04, 2025 08:18

இந்தியா பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற வேண்டுமானால் 1. இந்தியாவில் சுய தொழில் செய்வோரை ஊக்குவிக்க subsidy மத்திய அரசு திட்டத்தில் கொடுக்க வேண்டும். 2 . உதாரணமாக ஆட்டோ ஓட்டுனர்கள் நிறைய பேர் வாடகைக்கு ஓட்டுகிறார்கள். அவர்களுக்கு கிடைக்கும் தொகையோ சொற்பம் .இதை வைத்துக்கொண்டு அவர்களால் வயிறு நிறைய சாப்பிடக்கூட முடியாது . இந்த நிலையில் அவர்களால் தங்கள் பிள்ளைகளுக்கு தரமான கல்வியை கொடுக்க முடியாது. குறிப்பாக தமிழ் நாட்டில் இந்த நிலையில் நிறைய பேர் வாழ்வை சாவா என்ற நிலையில் இருக்கிறார்கள். இந்த னியை மாத்ர மத்திய அரசு ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் ,மத்ரும் சமுதாயத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கியர்வளு க்கு வங்கிகள் மூலமாக இதை செய்தல் வங்கிகளும் வளரும், மக்களின் வாழ்வாதாரமும் உயரும். இதனால் விலை வாசி குறையும். தமிழ் நாட்டில் நவோதய பள்ளிகளை திறந்து ஏழை எளியவர்களுக்கு தரமான கல்வியை கொடுத்து பெருந்தலைவர் காமராஜர், தேவர் திருமகன் முத்துராமலிங்க தேவர் போன்றவர்களின் கனவை நிறைவேத்த வேண்டும். அடித்தட்டு மக்கள் முன்னேறாமல் இந்தியா முன்னேறமுடியாது. வங்கிகளில் கடன் பெறுவோர் கடனை நேர்மையான முறையில் கட்டினால் அவர்களுக்கு சலுகை கொடுக்க வேண்டும். இந்தியாவில் உள்ள தொழிலதிர்பாகளான டாடா, பிர்லா, அம்பானி,அதானி போன்றவர்களை கொண்டு இந்தியாவின் பின் தங்கிய மாநிலங்களில் தொழில் துறையை மேம்படுத்த வேண்டும். இதற்காக MNC கம்பெனிகளை தேடி ஓட வேண்டியதில்லை.இதையெல்லாம் செய்தால் யாரையும் தேடிப்போய் இந்தியாவில் வர்த்தகம் செய்யுங்கள் என்று கெஞ்ச வேண்டியதில்லை. இதனால் அமெரிக்காவும் மத்ர ஐரோப்பிய நாடுகளும் இந்தியாவிடம் மண்டியிட்டு நிற்கும்.


Ramalingam Shanmugam
செப் 03, 2025 15:45

உதாசீனப்படுத்தி விடவும்


selvendran
ஆக 28, 2025 11:28

முந்தைய ஆட்சியாளர்கள் செய்த சிலதவறுகளால் இந்த நிலைமை.


selvendran
ஆக 28, 2025 11:21

வணக்கம் தினமலர்.


selvendran
ஆக 28, 2025 11:18

வணக்கம்


Ragavan Poovizhi
ஆக 27, 2025 09:13

முதலில் இது வரி பிரச்சனை இல்லை. மோடியின் நிர்வாகத்தால் இன்னூம் சில ஆண்டுகளில் இநதியா பொருளாதாரத்தில் முதன்மை பெற்றுவிடும். சீனா,ரஷ்யா,இந்தியா கூட்டணி டாலருக்கு சங்கு ஊதக்கூடும் என்பதாலே இக்கூட்டணியை உடைப்பதற்கே வரி விதிப்பு.மேலோட்டமான செய்தி. உண்மையில் பாகல்காட் தாக்குதலுக்கு மூல காரணமே அவர்களே.இரண்டு நாடுகளும் அடித்துக்கொள்ள வேண்டும் அதன் மூலம் அரசியல் செய்து உலக போலிஸ் என்பதை காட்டிகொள்ள எதை வேண்டுமானாளும் செய்வார்கள்.இந்நேரத்தில் நாம் பிரதமர் மோடி அவர்கள் கரத்தை அரசியலுக்கு அப்பாற்பட்டு வலுப்படுத்துவதே இந்திய குடிமகனுக்கான கடமை என கருதுகிறேன்


jayaraman
ஆக 22, 2025 09:47

இந்தியா அமெரிக்காவில் இருந்து 45 பில்லியன் டாலர்ஸ் இறக்குமதி செய்கிறது. 87 பில்லியன் டாலர்ஸ் ஏற்றுமதி செய்கிறது. Trade surplus is 42B USD. அமெரிக்க பொருட்களுக்கு இந்தியாவும் அதிக tax வசூலிக்கிறது. நான் அமெரிக்கா அதிபராக இருந்தாலும் அவர் இப்போது செய்வதை செய்தால் தான் அந்த நாட்டின் எதிர் காலத்திற்கு நல்லது.


joe
ஆக 21, 2025 16:42

நாம் காந்தி வழியில் சொல்லப்போனால் -அந்நிய பொருட்களை வாங்காமல் நம் நாட்டின் பொருள்களையே உபயோகிக்கவேண்டும் .........இதைவிட முக்கியம் நம் நாட்டின் உணவுப்பொருள்கள் எதையும் வெளி நாடுகளுக்கு போகக்கூடாது .இதெல்லாம் நடந்தால் நம் நாட்டில் விலை வாசியும் குறையும் .


முருகன்
ஆக 21, 2025 16:02

இந்தியா குடிமக்கள் அனைவரும் AMEZON , FLIPKART போன்ற அமெரிக்கா நிறுவனங்களிடமிருந்து ஆன்லைன் மூலம் பொருள்கள் வாங்குவதை முதலில் நிருத்த வேண்டும் . எவ்வளவூ முடுவுமோ அமெரிக்கா உற்பத்தி பொருட்களை வாங்காமல் புறக்கணிக்க வேண்டும் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை