உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டிரம்ப் - புடின் பேச்சுவார்த்தை : இந்தியா வரவேற்பு

டிரம்ப் - புடின் பேச்சுவார்த்தை : இந்தியா வரவேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அலாஸ்கா: '' அலாஸ்காவில் அதிபர்கள் டிரம்ப் - புடின் நடத்திய பேச்சுவார்த்தையை வரவேற்கிறோம்,'' என இந்தியா தெரிவித்துள்ளது.உக்ரைன் மீதான தாக்குதலை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷ்ய அதிபர் புடின் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. 3 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இருப்பினும் இந்த பேச்சுவார்த்தை நல்ல துவக்கமாக அமைந்தது என இரு நாட்டு தலைவர்களும் தெரிவித்தனர்.இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியது தொடர்பாக இந்தியா தனது கருத்தை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷ்ய அதிபர் புடின் இடையிலான சந்திப்பை இந்தியா வரவேற்கிறது. அமைதியை நோக்கிய அவர்களின் தலைமைத்துவம் பாராட்டுக்குரியது. இம்மாநாட்டில் ஏற்பட்ட முன்னேற்றத்தை இந்தியா வரவேற்கிறது. பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியில் மட்டுமே முன்னேறி செல்ல முடியும். உக்ரைன் பிரச்னை விரைவில் முடிவுக்கு வருவதை உலக நாடுகள் விரும்புகின்றன. இவ்வாறு அந்த அறிக்கையில் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

sankar
ஆக 16, 2025 19:25

கண்கள் பணித்தன இதயம் இனித்தது.சீக்கிரம் வரியை குறைத்து உலக மக்களுக்கு நல்லது செய்யுங்கள் .எல்லோரும் வியாபாரத்தை தொடர்ந்து மக்களை சந்தோஷப்படுத்துங்கள்...


SUBBU,MADURAI
ஆக 16, 2025 18:39

No tariffs on Russian partners for now, Tariffs on Russian oil buyers not needed for now, says the US President Trump after meet with Putin. I dont have to think about that right now. I may have to think about it in 2 or 3 weeks. Meeting went well!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை