உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓவராக பேசும் டிரம்ப்; ஓட ஓட விரட்டுவாரா கமலா! செப்.,4ல் நேருக்கு நேர் மோதல்

ஓவராக பேசும் டிரம்ப்; ஓட ஓட விரட்டுவாரா கமலா! செப்.,4ல் நேருக்கு நேர் மோதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வரும் செப்டம்பர் 4ம் தேதி தன்னை எதிர்த்து போட்டியிடும் கமலா ஹாரிஸ் உடன் நேரலையில் விவாதம் நடத்துகிறார்.அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 5ல் நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. அவரை எதிர்த்து, ஆளும் ஜனநாயக கட்சி சார்பில், அதிபர் ஜோ பைடன், 81, போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தேர்தல் விவாத நிகழ்ச்சியில் டிரம்பின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் ஜோ பைடன் திணறினார். வேட்பாளரை மாற்ற கட்சியில் பல தலைவர்கள் போர்க்கொடி துாக்கினர்.

விவாதத்தில் வெற்றி யாருக்கு?

இதையடுத்து அதிபர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவித்தார். துணை அதிபர் கமலா ஹாரிஸ், 59, ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக களமிறங்க உள்ளார். அவரை எளிதில் வெற்றி கொள்வேன் என தம்பட்டம் அடிக்கும் டிரம்ப், கமலாவை தாறுமாறாக விமர்சனம் செய்கிறார். 'இவ்வளவு காலம் இந்தியர் என்று கூறி வந்தவர், இப்போது கருப்பர் என தன்னை அடையாளப்படுத்துகிறார்' என்றும் கமலா பற்றி டிரம்ப் கூறியுள்ளார்.

நேரலை விவாதம்

இந்நிலையில், செப்டம்பர் 4ம் தேதி தன்னை எதிர்த்து போட்டியிடும் கமலா ஹாரிஸ் உடன் டிரம்ப் நேரலை விவாதம் நடத்துகிறார். பார்வையாளர்கள் முன்னிலையில் இந்த விவாதம் நடக்கிறது. பென்சில்வேனியாவில் நடக்கும் விவாதத்தில் பங்கேற்க டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ்க்கு அழைப்பு விடப்பட்டுள்ளது என பாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 'செப்.,4ல் கமலா ஹாரிஸை சந்தித்து விவாதிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்' என டிரம்ப் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

வல்லவன்
ஆக 03, 2024 22:07

Trump சரியாக பேசி உள்ளார்


Barakat Ali
ஆக 03, 2024 21:13

கமலா அம்மணி ஆரிய பரம்பரை ........ அவரைத்தான் நியாயமா பார்த்தால் நாம எதிர்க்கணும் .... ஆனால் ட்ரம்ப் அவரை எதிர்க்கிறார் ......... அதேசமயம் ட்ரம்ப் இஸ்லாமியர்களை நம்பாதவர் ......... அமெரிக்கக் குடியுரிமைச் சட்டங்களை கடுமையாக்கணும் ன்னு வெறிபுடிச்சு அலைபவர் .... ஆகவே டிரம்பை எதிர்ப்பதா அல்லது அம்மணியை எதிர்ப்பதா ???? திராவிடியால்ஸ் குழப்பத்தில் .....


swega
ஆக 03, 2024 21:03

யார் ஓவர் ஆக பேசினாலும் நிருபருக்கு என்ன கவலை ? இது நம்ம நாட்டு செய்தியல்ல.


Ramesh Sargam
ஆக 03, 2024 20:11

நுணலும் தன் வாயால் கெடும் என்பதுபோல, ட்ரம்ப் ஓவராக பேசி அதிபர் பதவி வாய்ப்பை இழக்கப்போகிறார்.


Kasimani Baskaran
ஆக 03, 2024 19:31

இடதுசாரி கொள்கை உடைய பைடனாலோ அல்லது கமலா ஹாரிஸாலோ இந்தியாவுக்கு அதிக நன்மைகள் கிடையாது. வலதுசாரி சிந்தனையுடைய டிரம்ப் நிச்சயம் இந்தியாவை மதிக்கும் தன்மையுடயவர்.


SUBBU,MADURAI
ஆக 03, 2024 19:12

இந்திய வம்சாவளியினர் என்று சொல்லிக் கொள்பவர்கள் யாரும் இதுவரை இந்தியாவிற்கு நல்லது செய்ததே இல்லை இவர் ஒரு போதும் தன்னை இந்திய பிரஜையாகவே காட்டிக் கொண்டது கிடையாது அதுவும் இந்த கமலா ஹாரிஸ் அம்மையார் காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவுடன் சேர்த்த போது பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் நம் பாரதத்திற்கு எதிராகவும் அறிக்கை விட்டவர் இந்த கமலா ஹாரிஸ். எனவே இந்தியர்கள் டொனால்டு ட்ரம்ப்பை ஆதரித்து ஓட்டு போடுவதுதான் நம் நாட்டிற்கு நன்மை பயக்கும்.


சாதாரண குடிமகன்
ஆக 03, 2024 19:05

ஓட ஓட போய் ஜெயிலுக்கு போக போறவர் கமல ஹாரிஸ்


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி