உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிதித்துறை செயலராக துஹின் காந்தா பாண்டே நியமனம்

நிதித்துறை செயலராக துஹின் காந்தா பாண்டே நியமனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மத்திய அரசின் நிதித்துறை செயலராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி துஹின் காந்தா பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.மத்திய அமைச்சரவை செயலராக இருந்த ராஜிவ் கவுபா பணி நிறைவு பெற்றார். அப்பதவிக்கு நிதித்துறை செயலராக இருந்த டி.வி. சோமநாதன், மத்திய அமைச்சரவை செயலராக நியமிக்கப்பட்டார்.இதையடுத்து காலியாக இருந்த நிதித்துறை செயலர் பதவிக்கு துஹின் காந்தா பாண்டே இன்று நியமனம் செய்யப்பட்டார். கடந்த 1987 ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். கேரடரான துஹின் காந்தா பாண்டே, முதலீடு மற்றும் பொதுத்துறை செயலராக இருந்து வந்தார். தற்போது நிதித்துறை செயலராக நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை மத்திய அரசு நியமனக்குழு இன்று பிறப்பித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை